பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!
DC vs KKR: `நாங்கள் தோற்றதற்கு இதுதான் காரணம்..' - விளக்கும் டெல்லி கேப்டன் அக்சர்
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் - டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது.
அந்த நேரத்தில் கொல்கத்தாவின் ஆன்ஃபீல்டு கேப்டனாக சுனில் நரைன் எடுத்த மாஸ்டர் மூவ்களால் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பேட்டிங் (27 ரன்கள்), பவுலிங் (3 விக்கெட்டுகள்), ஃபீல்டிங் (கே.எல். ராகுல் ரன் அவுட்) கேப்டன்சி (வருண் சக்ரவர்த்தி 18-வது ஓவர் கொடுத்தது) என அனைத்திலும் கலக்கிய நரைனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபட்டது.
தோல்விக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்டன் அக்சர், "15 - 20 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். சில விக்கெட்டுகளை சாதாரணமாக இழந்துவிட்டோம். பவர்பிளேவுக்குப் பிறகு அவர்களைக் கட்டுப்படுத்தியதுதான் ஒரே பாசிட்டிவ். சில பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும், 2 -3 பேட்ஸ்மேன்களால் டார்கெட்டுக்கு நெருக்கமாகச் சென்றோம்.

விப்ராஜ் பேட்டிங் செய்யும்போது நம்பிக்கை இருந்தது. அஷுதோஷ் இருந்திருந்தால் முதல் போட்டியில் செய்ததை அவர்கள் மீண்டும் செய்திருப்பார்கள். டைவ் அடிக்கும்போது சதை லேசாகக் கிழிந்துவிட்டது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், அடுத்த போட்டிக்கு 3 - 4 நாள்கள் இருக்கிறது. அதற்குள் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.