சேலம்: விமர்சையாக நடைபெற்ற எல்லைப்பிடாரி அம்மன் கோயில் தீமிதி விழா... Photo Albu...
DC vs LSG: `அடி... அதிரடி... சரவெடி' -`கெத்து' அஷுதோஷ்; கடைசி நேர த்ரில்; பந்தயமடித்த டெல்லி
இன்றைய (மார்ச் 24) ஐபிஎல் போட்டியில் அக்சர் படேல் தலைமயிலான டெல்லி அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும் விசாகப்பட்டினத்தில் களமிறங்கின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், பனியின் தாக்கம் காரணமாக முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். அதன்படி, லக்னோ அணியில் எய்டன் மார்க்கரமும், மிட்செல் மார்ஷும் ஒப்பனர்களாக இன்னிங்ஸைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு பவுண்டரி கணக்கைத் தொடங்கினார் மிட்செல் மார்ஷ். அதைத்தொடர்ந்து, அக்சர் படேல் வீசிய இரண்டாவது ஓவரில் மார்க்கரம் ஒரேயொரு ஃபோர் மட்டும் அடிக்க இரண்டு ஓவர் முடிவில் லக்னோ 12 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர், இனியும் பொறுத்தது போதும் என ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரை சிக்ஸருடன் மார்க்ரம் வரவேற்க, மார்ஷ் தன் பங்குக்கு ஃபோர், சிக்ஸ், ஃபோர் என வெளுத்து வாங்கி மூன்று ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 33-ஆக உயர்த்தினார். அதையடுத்து, ரன்களைக் கட்டுப்படுத்த நான்காவது ஓவரை வீசிய அக்சர் படேல், ஒரேயொரு ஃபோர் உட்பட 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதே ஓவரில் மிட்ஸ்ல் மார்ஷுக்கு எதிராக எல்பிடபிள்யு-க்கு டிஆர்எஸ் கேட்டு ஒரு ரிவ்யூவை அக்சர் படேல் வீணடித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் 20 வயது அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் ஐந்தாவது ஓவரை வீச வந்தார்.
இரண்டாவது பந்திலேயே பவுண்டரி கொடுத்து அடிவாங்கினாலும், அதற்கடுத்த இரண்டாவது பந்திலேயே மார்க்ரமை விக்கெட் எடுத்து ஐபிஎல் கரியரில் தனது விக்கெட் கணக்கைத் தொடங்கினார் விப்ராஜ். லக்னோ ஐந்து ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்களைப் பூர்த்தி செய்ய, பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் முகேஷ் குமார். முதல் பந்தை வைடுடன் தொடங்க மார்ஷின் பேக் டு பேக் சிக்ஸ், ஃபோரால் பவர்பிளேயில் லக்னோ 64 ரன்களைக் குவித்தது. ஆனால், இதற்குப் பிறகுதான் உண்மையான பவர்பிளேவை ஆடத் தொடங்கியது மார்ஷ் - நிக்கோலஸ் பூரான் கூட்டணி.

விப்ராஜ் வீசிய 7-வது ஓவரை சிக்ஸருடன் வரவேற்ற மார்ஷ், அடுத்த பந்திலேயே சிங்கிள் எடுத்து அரைசதத்தைக் கடக்க, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு என்று அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார் பூரான். அடுத்த பந்தையும் பூரான் தூக்கியடிக்க அது சமீர் ரிஸ்வியை நோக்கிச் சென்றது. ஆனால், அந்த எளிய கேட்சையும் சமீர் ரிஸ்வி தவறவிட அடுத்த பந்திலேயே மீண்டும் சிக்ஸ் அடித்து ஓவரை முடித்துவைத்தார் பூரான். 7-வது ஓவரில் மட்டும் லக்னோவுக்கு 25 ரன்கள் வந்தது.
எப்படியாவது டெல்லியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த 8-வது வீச வந்தார் குல்தீப். அந்த ஓவரில் பூரான் இரண்டு பவுண்டரி அடிக்க, மோஹித் சர்மா வீசிய 9-வது ஓவரில் ஒரேயொரு பவுண்டரியுடன் லக்னோவுக்கு 10 ரன்கள் கிடைத்தது. பின்னர், இரண்டு ஓவர்களாக சைலண்ட் மோடில் இருந்த மார்ஷ் 10-வது ஓவரில் ஓரு சிக்ஸ் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 117 ரன்களை எடுத்தது லக்னோ. 11-வது ஓவரை மோஹித் சர்மா கட்டுப்படுத்த, 12-வது ஓவரை வீசிய முகேஷ் குமார், 72 ரன்கள் அடித்து பீஸ்ட் மோடில் இருந்த மார்ஷை விக்கெட் எடுத்து பெவிலியனுக்கு அனுப்பி லக்னோவின் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

ஆனால், மார்ஷை பெவிலியனுக்கு அனுப்பிய டெல்லி, பூரானை கவனிக்கத் தவறிவிட்டது. சம்பந்தமே இல்லாமல் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13-வது ஓவரை வீச, முதல் பந்தை மட்டும் டாட் பால் ஆக்கி, அடுத்த 5 பந்துகளில் தொடர்ச்சியாக 4 சிக்ஸ், 1 பவுண்டரி என ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்தார் பூரான். லக்னோவின் ஸ்கோரும் 150-ஐக் கடந்தது. மொத்தமாக, 13 ஓவர்கள் முடிவில் லக்னோ 161 ரன்கள் எடுத்திருக்கவே, எப்படியாவது ரன்களைக் கட்டுப்படுத்த 14-வது ஓவரை வீசவந்த குல்தீப் யாதவ், நான்காவது பந்தில் தனது முன்னாள் கேப்டன் பண்ட்டை 0 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இதுதான் சரியான நேரம் என ஸ்டார்க் கையில் அக்சர் படேல் பந்தைக் கொடுக்க, 15-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பூரான் 75 ரன்களில் கிளீன் போல்டானார். அந்த சமயத்தில், டேவிட் மில்லர் - ஆயுஷ் பதோனி புது பார்ட்னர்ஷிப் அமைக்கும் முயற்சியில் இறங்கினர். 16-வது ஓவரில் இவருவரும் ரிஸ்க் எடுக்காமல் நிதானமாக ஆடி 6 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அந்த நிதானத்தை 17-வது ஓவரின் இரண்டாவது பந்திலேயே, ஆயுஷ் பதோனி விக்கெட் எடுத்துக் குலைத்தார் குல்தீப். அதற்கடுத்த இரண்டாவது பந்தில் புதிதாகக் களமிறங்கிய ஷர்துல் தாகூரை ரன் அவுட்டாக்கினார் அக்சர் படேல். ஆட்டம் மெல்ல மெல்ல டெல்லியின் கட்டுக்குள் வர ஆரம்பித்தது.
178 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த லக்னோ அணிக்கு ஒரே நம்பிக்கையாக டேவிட் மில்லர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். மோஹித் சர்மா வீசிய 18-வது ஓவரில் மில்லர் ஒரேயொரு பவுண்டரி அடிக்க மொத்தமாக அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது. லக்னோவின் ஸ்கோர் 188-ஆக உயர தனது கடைசி ஓவரை வீசவந்தார் ஸ்டார்க். மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ஷாபாஸ் அகமது, அடுத்த பவுன்சர் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரவி பிஷ்னாயை ஓவரின் கடைசி பந்தில் கிளீன் போல்டாக்கி, மூன்று விக்கெட்டுகளுடன் தனது வேலையை நிறைவுசெய்தார் ஸ்டார்க். 19 ஓவர்கள் முடிவில் 194 ரன்களுக்கு 8 ஓவர்களை இழந்தது லக்னோ. இன்னிங்ஸை தொடங்கிய வேகத்துக்கு எப்போதோ 200 ரன்களைக் கடக்க வேண்டிய லக்னோ, 200 ரன்களைத் தொடுமா என்ற நிலைக்கு ஆளானது.

கடைசி ஓவரை வீசவந்த மோஹித் சர்மா, மில்லருக்கு ஸ்லோ பாலாக வீசி முதல் நான்கு பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். விரக்தியிருந்த மில்லர், கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி, 20 ஓவர்கள் முடிவில் லக்னோவின் ஸ்கோரை 209-க்கு கொண்டுசென்றார். லக்னோவில் அதிகபட்சமாக பூரான் 75 (30), மார்ஷ் 72 (36) ரன்கள் அடித்தனர். டெல்லியில் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து, 210 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியில் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஒப்பனர்களாக இறங்கினர்.
லக்னோ அணியில் மார்ஷுக்குப் பதில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் களமிறக்கப்பட்டார். முதல் ஓவரை வீசவந்த ஷர்துல் தாகூர் மூன்றாவது பந்திலேயே ஒரு ரன்னில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை வெளியேற்றினார். அதைத்தொடர்ந்து, களமிறங்கிய அபிஷேக் போராலையும் ஐந்தாவது பந்தில் 0 ரன்னில் வெளியேற்றினார் ஷர்துல். 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய டெல்லியில் டு பிளெசிஸுடன் கைகோர்த்த சமீர் ரிஸ்வி, முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தனது ரன் கணக்கைத் தொடங்கினார்.

ஆனால், அந்த மொமெண்ட்டின் ஆரவாரம் அடங்குவதற்குள், இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அவரை அவுட்டாக்கினார் மணிமாறன் சித்தார்த். இரண்டு ஓவர்கள் முடிவில் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்த டெல்லியை மீட்க கேப்டன் அக்சர் படேல் களத்துக்கு வந்தார். திக்வேஷ் ரதி வீசிய மூன்றாவது ஓவரில் அக்சர் படேலும், டு பிளெசிஸும் தலா ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது. அதையடுத்து, மீண்டும் ஓவர் வீச வந்த சித்தார்த்தை அக்சர் படேல் சிக்ஸருடன் வரவேற்க, பேக் டு பேக் பவுண்டரியுடன் அந்த ஓவரை முடித்து வைத்தார் டு பிளெசிஸ்.
அதேவேகத்தில், ஷர்துல் வீசிய ஐந்தாவது ஓவரில் அக்சர் படேல் பவுண்டரியும், டு பிளெசிஸ் சிக்ஸும் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. நிதானமாக மீண்டெழும் டெல்லி அணிக்கு பவர்பிளேயின் கடைசி ஓவரை வீச வந்த திக்வேஷ் ரதி, மூன்றாவது பந்திலேயே அக்சர் படேலை அவுட்டாக்கினார். பவர்பிளே முடிவில், டெல்லி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருக்க 23 ரன்களுடன் டு பிளெசிஸும், 2 ரன்களுடன் ஸ்டப்ஸும் களத்தில் நின்றுகொண்டிருந்தனர். அடுத்து, ரவி பிஷ்னாய் வீசிய 7-வது ஓவரில் சிக்ஸ் அடித்த டு பிளெசிஸ் அதே ஓவரில் மில்லர் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த வேளையில் டெல்லியின் கடைசியாக நம்பிக்கையாக இம்பேக்ட் பிளேயராக அஷுதோஷ் சர்மா கிரீஸுக்குள் நுழைந்தார். திக்வேஷ் ரதி வீசிய 8-வது ஓவரில் அஷுதோஷின் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் வந்தது. அதைத்தொடர்ந்து, ரவி பிஷ்னாய் வீசிய 9-வது ஓவரில் ஸ்டப்ஸும், அஷுதோஷும் சிக்ஸ், ஃபோர் அடிக்க டெல்லிக்கு மொத்தமாக 11 ரன்கள் கிடைத்தது. பிரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் 5 ரன்கள் மட்டும் வரவே, 10 ஓவர்கள் முடிவில் டெல்லி 88 ரன்களைக் குவித்தது. டெல்லியின் வெற்றிக்கு, 60 பந்துகளில் 122 ரன்கள் தேவைப்பட்ட சூழலில், தனது மூன்றாவது ஓவரை வீசவந்தார் தமிழக வீரர் சித்தார்த். அந்த ஓவரில் அஷுதோஷின் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் வந்தது. அதையடுத்து, பிரின்ஸ் யாதவ் வீசிய 12-வது ஓவரில் 6 ரன்கள் மட்டும் வந்தது.
பின்னர், சித்தார்த் வீசிய 13-வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிய ஸ்டப்ஸ், அடுத்த பந்திலேயே கிளீன் போல்டானார். 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த டெல்லி அணியில் அஷுதோஷுடன் கைகோர்த்த விப்ராஜ், ரவி பிஷ்னாய் வீசிய 14-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் வந்தது. அதோடு நிற்காத விப்ராஜ், ஷாபாஸ் அகமது வீசிய 15-வது ஓவரில் ஒற்றைக் கையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால், அதே ஓவரில் அஷுதோஷின் கேட்சை தவறவிட்டார் பண்ட்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அஷுதோஷ், பிரின்ஸ் யாதவ் வீசிய 16-வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ், ஃபோர் அடிக்க, தன்பங்குக்கு விப்ராஸும் இரண்டு பவுண்டரி அடித்தார். அஷுதோஷ் - விப்ராஜ் பார்ட்னர்ஷிப் 20 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. 16 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் அடித்திருந்த டெல்லி அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டது. 14 பந்துகளில் 39 ரங்களுடன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த விப்ராஜ், திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் சித்தார்த் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெல்லிக்கு 7 விக்கெட் பறிபோன நிலையில் ஸ்டார்க் களத்துக்கு வந்தார். ஆனால், அந்த ஓவரில் டெல்லிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது.ஒரு விக்கெட்
அதைத்தொடர்ந்து, 18-வது முதல் பந்திலேயே டெல்லியின் எட்டாவது விக்கெட்டாக ஸ்டார்க்கை வெளியேற்றினார் ரவி பிஷ்னாய். ஆனாலும், அஷுதோஷ் களத்தில் நிற்பதால் டெல்லி ரசிகர்கள் வெற்றி கிடைக்கும் நம்பிக் கொண்டிருந்தனர். அத நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக, அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸ், ஃபோர், சிக்ஸ் அடித்து லக்னோவை பதட்டத்துக்குள்ளாக்கினார் அஷுதோஷ். ஆனால், திக்வேஷ் ரதி 19-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த குல்தீப் யாதவ் மூன்றாவது பந்தில் ரன் அவுட்டாக ஆட்டம் பரபரப்பில் உச்சத்துக்குச் சென்றது.
And he does it in
— IndianPremierLeague (@IPL) March 24, 2025
Ashutosh Sharma, take a bow! ♂️
A #TATAIPL classic in Vizag
Updates ▶ https://t.co/aHUCFODDQL#DCvLSG | @DelhiCapitalspic.twitter.com/rVAfJMqfm7
கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே மிச்சமிருந்த சூழலில் அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் அஷுதோஷ் 12 அடிக்க டெல்லி 204 ரன்கள் தொட்டது . லக்னோவின் வெற்றிக்கோ ஒரேயொரு விக்கெட்தான் தேவை. டெல்லிக்கோ 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை. கடைசி ஓவரை வீச வந்தார் ஷாபாஸ் அகமது. முதல் பந்து டாட் ஆக, அடுத்த பதில் மோஹித் சர்மா சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை அஷுதோஷுடன் ஒப்படைத்தார். அடுத்த பந்திலேயே அஷுதோஷ் சிக்ஸ் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வெற்றிபெறவைத்தார். அதிரடியாக ஆடிய அஷுதோஷ் தலா ஐந்து பவுண்டரி, ஐந்து சிக்ஸ் என 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.