திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் இறந்தவா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில...
Death Clock: உங்கள் மரணத்தைக் கணிக்கும் AI செயலி... ஆர்வம் காட்டும் மக்கள்!
"மரணத்தைப் பற்றிப் பேசுவது அச்சம் கொள்வதற்காக அல்ல, இந்த வாழ்நாளின் மகிமையை உணர்வதற்காக" என்பார் தலாய் லாமா.
மனித இனம் அணுகுவதற்கு அச்சமாகவும் ஆராய்வதற்கு ஆர்வமூட்டுவதுவும் இருக்கும் விஷயம் மரணம். உலகில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் விதிக்கப்பட்ட க்ளைமேக்ஸ் மரணம்!
மரணம் கணிக்க முடியாததாக இருப்பது அதன் மீதான ஆர்வத்துக்குக் காரணம். அதனாலேயே மரணத்தைக் கணிப்பதற்கான மனித முயற்சிகளும் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றன. 'நான் எத்தனை வயசு வரை இருப்பேன்' என்ற கேள்வியை இனி ஏ.ஐ தொழில்நுட்பத்திடமும் கேட்கலாம்.
ஏ.ஐ உதவியுடன் செயல்படும் டெத் க்ளாக் (Death Clock) என்ற செயலி கடந்த ஜுலை மாதம் வெளியானது. பணம் கட்டி மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய இந்த செயலி, குறுகிய காலத்திலேயே 1 லட்சத்து 25 ஆயிரம் பதிவிறக்கங்களைப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயலி வாழ்நாட்களைக் கணிக்கக்கூடியது. இதற்காக மனித ஆயுள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 1200 ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, ஏஐ-க்கு உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆய்வுகளில் பங்கேற்ற மில்லியன் கணக்கானோரின் தரவுகள் மூலம் ஏ.ஐ-க்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் தூக்கம் ஆகியவற்றை அறிந்து அதன் மூலம் இறப்பு தேதியைத் தெரிவிக்கிறது இந்த செயலி. இதற்காக ஆண்டுக்கு 40 டாலர் அதாவது 3,400 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.
இந்த செயலியில் தொடர்ந்து கண்காணிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உத்வேகம் அளிக்குமெனக் கூறப்படுகிறது. இதனால் ஆரோக்கியம் தொடர்பான செயலிகளின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது டெத் க்ளாக்.
நீண்ட ஆயுளுடன் இருக்க நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த செயலி கூறும் தீர்வாக இருக்கிறது. ஆனால், அதற்காகத் தினமும் நாம் இறந்துபோகும் நாளுக்கான கவுண்ட் டௌனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா என்று கேட்டால், இந்த செயலியை உருவாக்கிய ப்ரன்ட் ஃப்ரான்சன், "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மரணிக்கும் நாளை விட முக்கியமான நாள் எதுவுமில்லை" என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...