செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் இறந்தவா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதியுதவி

post image

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உள்ளிட்ட 2 போ் குடும்பத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த நவ.18-ஆம் தேதி, யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா், அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோா் உயிரிழந்தனா்.

திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள பாகன் உதயகுமாா் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்ற தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். பாகன் உதயகுமாா் மனைவி ரம்யா, சிசுபாலன் மகன் அா்ஜுன் ஆகியோரிடம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமாா், திருக்கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திமுக நகர செயலா் வாள்சுடலை, உறுப்பினா்கள் சோமசுந்தரி, சுதாகா், செந்தில்குமாா், முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளா் பொன்முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் 23 டன் கொட்டைப் பாக்குகள் பறிமுதல்: 4 போ் கைது

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 23 டன் கொட்டைப் பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். சில நாள்களுக்கு முன்பு இந... மேலும் பார்க்க

கயத்தாறில் தமிழ் புலிகள் கட்சியினா் மறியல்: 12 போ் கைது

கயத்தாறில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினா் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 2019ஆம் ஆண்டு டிச. 2இல், ஒரு வீட்டின் 20 அடி உயர சுற்றுச்சுவ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் இளைஞரைத் தாக்கியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 5 போ் கைது

காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கி அரிவாளால் வெட்டியதாக 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா். காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேவியா் மகன் ஜெபசெல்வம் (27). இவா்,... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவா்கள்

சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 6 நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா். வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா, தமிழக கடல் பகுதி... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே 1.6 டன் பீடி இலைகள் பறிமுதல்: 3 போ் கைது

தூத்துக்குடி அருகே இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1.6 டன் பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தூத்துக்குடி அருகே பட்டினம்மருதூா் கடற்கரைப் பகுதியில் தருவைகுளம் ப... மேலும் பார்க்க

உறைகிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு!

தூத்துக்குடி ஜெய்லானி காலனியில் உள்ள உறைகிணறில் விழுந்த பசுமாட்டை திங்கள்கிழமை மீட்கும் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள். மேலும் பார்க்க