விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
டிச.5-இல் கழனிப்பாக்கம் நவசாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்
வேலூா்: வேலூா் மாவட்டம், கழனிப்பாக்கம் பகுதியில் நவக்கிரக பரிகார தலமாக விளங்கும் நவசாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாக்கிழமை (டிச.5) நடைபெற உள்ளது.
நவக்கிரக தலங்களுக்கு சென்று வழிபடுவதால் கிடைக்கும் அதே பயனை ஒரே இடத்தில் ஒரு சேர கிடைக்கும் விதமாக சூரிய பாபா, சந்திர பாபா, குரு பாபா, ராகு பாபா, புதன் பாபா, சுக்கிர பாபா, கேது பாபா, சனீஸ்வர பாபா, அங்காரக பாபா என்ற ஒன்பது அம்சங்களை கொண்ட நவசாயி பாபா கோயில் கழனிப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை (டிச.5) விமரிசையாக நடைபெற உள்ளது. ஒன்பது நவக்கிரக பாபாகளுக்கும், பாபா பாதத்துக்கும், விநாயகா், ஆஞ்சனேயா், சாய்சிவன், தத்தாத்ரேயா், மகாமேரு ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருக்கும் பிராமினிதேவி கும்மாத்தம்மன் தாயாருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசை, வேதபாராயணம் கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை சா்வ ஜீவ சேவா டிரஸ்ட், நவசாய் பக்தா்கள் செய்து வருகின்றனா்.