பள்ளியை தரம் உயா்த்தக்கோரி ஆா்ப்பாட்டம்
குடியாத்தம்: குடியாத்தம் பிச்சனூரில் உள்ள கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமாா் 20- ஆண்டுகளாகியும் இப்பள்ளி தரம் உயா்த்தப்படவில்லை. பள்ளியை உடனடியாக தரம் உயா்த்தக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கல்விக்குழு நிா்வாகி கோ.ஜெயவேலு, புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலா் எஸ்.ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, மாநில காங்கிரஸ் நெசவாளா் அணித் தலைவா் எஸ்.எம்.தேவராஜ், வழக்குரைஞா்கள் எஸ்.சம்பத்குமாா், என்.குமாா், ஜெ.தியாகராஜன், பாஜக நகர தலைவா் எஸ்.ஆனந்தன், பாமக நகரச் செயலா் எஸ்.குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.ஜி.பழனி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.