செய்திகள் :

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' - கட்டளையிட்ட தலைமை... டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

post image

தணிந்த ஏக்கம்..!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதன் அத்தனை நகர்வுகளையும் முடிவு செய்யும் தலைநகர் டெல்லி எட்டாக் கனியாகவே இருக்கிறதே என்ற அவர்களது ஏக்கம் தணிந்திருக்கிறது

இமாலய வெற்றியுடன் அக்கட்சி டெல்லி சட்டமன்றத்திற்குள் நுழைகிறது. அதற்குச் சமமான மகிழ்ச்சி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா என ஆம் ஆத்மி கட்சியின் அத்தனை முக்கிய தலைவர்களையும் மண்ணை கவ்வ வைத்தது. அதேபோல காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியத்தைப் பெற்றது, பாஜக முகாமுக்கு எக்ஸ்டரா போனஸ்.

நட்டா

ஆனால் இதையெல்லாம் பாஜக சுலபமாகச் செய்துவிடவில்லை. கட்சி தலைமையின் கண்டிப்பான உத்தரவுகளை ஏற்று கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளால் சாத்தியமாகி இருக்கிறது. அதாவது மூல காரணம், பாஜக தேசிய தலைமை எடுத்த பல அதிரடி முடிவுகள்.

``முதல்வர் யார்... அமைச்சர்கள் யார் என்ற எந்த கேள்வியும் யாரும் கேட்காதீர்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், கலகம் செய்யாதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள், வெற்றியை ஈட்டித் தாருங்கள். உங்களுக்குத் தேவையானவற்றைக் கட்சித் தலைமை செய்து தரும்" எனத் தேசிய தலைமை கொடுத்த உத்வேகம், பாஜக தொண்டர்களை உற்சாகத்துடன் வேலை செய்யத் தூண்டியது.

தலைமை கொடுத்த வார்னிங்..!

குறைந்தபட்சம் 30 கூட்டங்களுக்கு மேலாக டெல்லி நிர்வாகிகளுடன் நடத்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், அனைத்து கூட்டங்களிலும் அழுத்தமாகச் சொல்லி வலியுறுத்தியது. ``டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கிட்டத்தட்ட 30 வருடங்களாகப் போகிறது. இதுதான் நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளும் கடைசியானது. இதைச் சரியாக நீங்கள் செய்து முடிக்கவில்லை என்றால், உங்கள் அரசியல் எதிர்காலத்தை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" எனத் திட்டவட்டமாகச் சொல்லி இருந்தார்கள்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்விக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டது போன்ற பல விஷயங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஹரியானாவில், ராஜஸ்தானில், ஒடிசாவில், மகாராஷ்டிராவில் கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவுகளை கச்சிதமாகச் செய்து முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதிமுக்கிய பதவிகளையும் காரணங்களாகக் காட்டி, வேலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்.

பர்வேஷ் வர்மா - கெஜ்ரிவால்

அதனால்தான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழன்று வேலை பார்த்தார்கள் பாஜக-வின் டெல்லி நிர்வாகிகளும், தொண்டர்களும். ஒவ்வொரு டெல்லி வாசிகளின் வீட்டையும் ஒரு முறையாவது தட்டி வாக்கு சேகரிக்க வேண்டும். கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரிடமும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை கட்டாய உத்தரவாகப் பிறப்பித்ததால், போட்டி கடுமையாக இருக்கக்கூடிய பல தொகுதிகளில் இரண்டு தெருக்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற வீதம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வேலைகள் மும்முரமாக நடந்தன.

மோடி

பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்... அவ்வளவு ஏன் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தேசிய தலைமை தலைமை இறக்கி இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் சிறு பிரச்னைக்கூட ஏற்படாமல் பிரசாரங்களைக் கச்சிதமாக நடத்திக்காட்டி இருக்கிறார்கள். பிரதமரது தேர்தல் பொதுக்கூட்டம் தொடங்கி தெருமுனைக் கூட்டம் வரை சிறு பிசிரு இல்லாமல் ஒருங்கிணைத்துச் செய்து காட்டி இருக்கிறார்கள். இதில் பாஜக டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. அதனால்தான் தேர்தலில் கூட போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே முன் நின்று நடத்தி இருக்கிறார்.

வீரேந்திர சச்தேவ்

தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றுத் தந்ததற்காகவே இரண்டு முறை மத்திய இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து அழகு பார்த்த பாஜக தலைமை, டெல்லி மாநில நிர்வாகிகள் பலருக்கும் உரிய அங்கீகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கான பரிசாக வழங்க உள்ளது என்கிறார்கள்.

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* டெல்லி தேர்தல் முடிவுகள்! - Live Report From Delhi * அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கத் துணைநிலை ஆளுநர் உத்தரவு ஏன்?* வெளியேறச் சொன்ன போலீஸ்.. கடுப்பாகிக் கொந்தளித்த சீதால... மேலும் பார்க்க

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ... மேலும் பார்க்க

Samsung: 'கலவரம் பண்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!'- உள்ளிருப்பு போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சங்கம் அமைக்க போராடியவ... மேலும் பார்க்க