கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
Delhi: ``கெஜ்ரிவால் அதை செய்திருக்கணும்; தேர்தல் தோல்விக்கு காரணம் இதுதான்'' - பிரசாந்த் கிஷோர்
அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கிறது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுகாலமாக டெல்லியை ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியைப் பறிக்கொடுத்திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தால் ஆம் ஆத்மி நிச்சயம் வென்று இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![அரவிந்த் கெஜ்ரிவால்](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-17/hvvc4joo/66e93b90df498.jpg)
இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களைக் கூறியிருக்கிறார். “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜாமீனில் வெளிவந்த பிறகு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதுமட்டுமின்றி கெஜ்ரிவால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அதீதமாக முன்னுரிமை கொடுத்துவிட்டார். அதேபோல அண்மை காலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இண்டியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
தற்போதைய சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி எழுச்சி பெறுவது மிகவும் கடினமான விஷயம். ஆகவே, தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs