Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென...
Dinesh Mangaluru: `கே.ஜி.எஃப்' பட நடிகர் காலமானார்; திரைப்பிரபலங்கள் இரங்கல்
பிரபல கர்நாடக நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்.
கர்நாடக திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் நடிகர் தினேஷ் மங்களூரு.
'ராணா விக்ரம்', 'அம்பரி, சவாரி', 'இன்டி நின்னா பேட்டி', 'ஆ டிங்கி' மற்றும் 'ஸ்லம் பாலா' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

தவிர 'கே.ஜி.எஃப் படத்தில்' பாம்பே டான் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தினேஷ் மங்கப்ளூரு இன்று (ஆகஸ்ட் 25) உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார்.
அவரின் மறைவிற்கு கர்நாடக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...