செய்திகள் :

Diwali : பட்டாசுப் புகை; காற்று மாசுபாடு... சமாளிக்க கைகொடுக்கும் உணவுகள்! | Health Tips

post image

பட்டாசை வெடித்துத் தள்ளியிருக்கிறோம். கலர் கலர் புஸ்வானங்கள் காற்றை எக்கச்சக்கமாக மாசுப்படுத்தியிருக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களும் எளிதில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களும் இன்னும் சில நாள்களுக்கு காற்று மாசுபாட்டால் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

"இது போன்ற அசாதாரண சூழலில் நாம் அன்றாட உணவில் அதை எதிர்கொள்ளத் தேவையான சத்து நிரம்பிய உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்'' என்கிறார் டயட்டீஷியன் கற்பகம் வினோத்.

காற்று மாசுவை எதிர்கொள்ள நாம்  சேர்க்க வேண்டிய உணவுகளை அவர் பட்டியலிட்டார்.

மல்ட்டி வைட்டமின்...

* "வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி சத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இரண்டு எலுமிச்சை பழங்களைச் சாறு பிழிந்து குடித்தாலே போதுமானது.

* முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லிக்கீரை போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இவற்றை சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

பசலைக்கீரை!

* உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் உடலினுள் சென்றுவிட்டால் அவற்றிற்கு எதிராக வைட்டமின் 'ஈ' உடனே செயல்படத் தொடங்கி, அவை உடலை தாக்காத வகையில் பாதுகாக்கும். பாதாம், வால்நட், சூரியகாந்தி விதைகள் மற்றும் மீன் வகைகளிலும், அவகேடோ பழத்திலும் வைட்டமின்  ஈ செறிந்துள்ளது. தினமும் காலையில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தைப்போல, முந்தைய நாள் இரவு ஊறவைத்த பாதாம் பருப்புகளைத் தோலுரித்துச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். இந்த உணவுகளைச் சேர்த்துக்கொண்டால் காற்றின் மாசு, துகள்கள் உடலினுள் சென்றாலும்கூட அதை நம் நோய் எதிர்ப்பு சக்தியால் வெல்ல முடியும்.

* காற்று மாசுபாட்டால் உடல்நலத் தொந்தரவு ஏற்படும் சூழலில் இஞ்சி, கிராம்பு, மிளகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ரசம், தேநீர், மோர், சூப் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாலுடன் மஞ்சள்தூள் கலந்தும் குடிக்கலாம். 

* மீன்களில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டக்கூடியது. அசைவம் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3 மாத்திரைகள், வெந்தயக் கீரை முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒமேகா 3

* மக்னீசியம் நிறைந்த உணவுகள் நுரையீரல் சிரமமின்றி இயங்க உதவுவதால், அந்தச் சத்து நிறைந்துள்ள  பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், தானியங்களைச் சாப்பிடலாம். 

* துளசி, புதினா, கற்றாழை ஆகியவை உடலுக்குள் இருக்கும் கழிவுகளை நீக்கும் சிறப்பு கொண்டவை. இவற்றுடன், அன்றாடம் நமது உடலில் தேங்கும் நச்சுப் பொருள்களை வெளியேற்றத் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டியதும் அவசியம். உடலில் நீர் வறட்சி ஏற்படும் அளவுக்குத் தண்ணீர் அருந்தாமல் இருப்பதுதான் பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமிடுகிறது.

கற்பகம் வினோத்

*  பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனைக் கருத்தில்கொண்டு, இது போன்ற சூழலைத் திறம்படக் கையாள முறையான உணவுகளை எடுத்துக்கொள்வதோடு, குழந்தைகளையும் மாசு தாக்குதலிலிருந்து கவனமாகப் பாதுகாக்க வேண்டும்."

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க