செய்திகள் :

DMDK: "ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக-வுடன் மனவருத்தமா?" - பிரேமலதா விஜயகாந்த் பளீர்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தவம் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளாரே?" என்ற கேள்விக்கு, "அவர்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. இப்போது தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர் பிரச்னை என இந்த மூன்றும்தான் முக்கிய பிரச்னையாக உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நம் தாய்மொழியான தமிழானது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும் என்பதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு. அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்த்தின் வார்த்தை. அதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு.

பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைப்பதாகக் கருத்து உள்ளது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அதைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை 40 எம்.பி., தொகுதிகளைக் குறைக்கின்ற வேலையில் மத்திய அரசு ஈடுபட்டால் உறுதியாகத் தமிழக அரசுடன் சேர்ந்து தமிழகத்திற்காகப் போராட உறுதியாக இருக்கிறோம்.

மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மிகவும் மனவேதனையாக இதைப் பதிவு செய்கிறேன். அவர்களின் வாழ்வாதாரம் கடலை நம்பித்தான் உள்ளது. இலங்கை கடற்படையினரால் தினந்தோறும் தாக்கப்படுவதையும், உடைமைகள் திருடப்படுவதையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதையும், கைது செய்யப்படுவதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும். நமது பிரதமர் இலங்கைக்குச் செல்லும்போது இனிவரும் காலங்களில் மீனவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க உறுதியாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். நாம் அதனை விட்டுக் கொடுத்ததிலிருந்துதான் மீனவர்கள் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

தேர்தல் வியூக ஆலோசகர்

"கட்சிகள் தேர்தல் வியூக ஆலோசகர்களை நியமிக்கிறதே" என்ற கேள்விக்கு, "அது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு. ஒரு ஆலோசகர் வைப்பதால் நூறு சதவிகிதம் வெற்றி கிடைக்குமா என்று சொல்ல முடியாது. அது அந்த கட்சியின் வியூகம். கேப்டனை பொறுத்த வரை எப்போது மக்களை மட்டும்தான் நம்பினார். ஒரு ஆலோசகர் மூலம்தான் வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த ஆலோசகர் போட்டியிட்ட மாநிலத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் கேள்வி? அந்தந்த கட்சித் தலைவர்கள் எடுக்கிற நிலைப்பாடு குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை."

பிரேமலதா விஜயகாந்த்

"2026-ல் அ.தி.மு.க-தே.மு.தி.க-பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?" என்ற கேள்விக்கு, "இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது நிச்சயமாக அதற்கான அறிவிப்புகள் வரும்" என்றார்.

"ராஜ்யசபா சீட் விஷயத்தில் அ.தி.மு.க-வுடன் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதா?" என்ற கேள்விக்கு, "அந்த மாதிரி எதுவும் கிடையாது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க

``மூன்றாவது குழந்தை... பெண் என்றால் ரூ.50,000; ஆண் என்றால் பசு" - ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் இந்தியளவில் குறிப்பாக தென்னிந்தியாவை அச்சுறுத்தியிருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்திய தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு வி... மேலும் பார்க்க

`மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்' - தர்மேந்திர பிரதானைச் சாடிய செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வியெழ... மேலும் பார்க்க

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க

Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?

இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவர... மேலும் பார்க்க