செய்திகள் :

Doctor Vikatan: அதிக புரோட்டீன் உணவுகள் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?

post image

Doctor Vikatan: என்னுடைய நண்பனுக்கு 38 வயதாகிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவான். சமீபகாலமாக அவன் உணவில் அதிக அளவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்கிறான். ஒருநாளைக்கு 5-6 முட்டைகள்,  சிக்கன், புரோட்டீன் பவுடர் என சாப்பிடுகிறான். கேட்டால் புரோட்டீன் உணவுகள்தான் தசைகளை வலுவோடு வைத்திருக்கும், தசைகளின் அடர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும் என்கிறான். புரோட்டீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா.... என் நண்பன் செய்வது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்  

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஆரோக்கியமான உடல் கட்டமைப்புக்கும் செயல்பாட்டுக்கும் புரதச்சத்து என்பது மிகமிக முக்கியம். ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதைப் போல புரதச்சத்தும் அளவு தாண்டும்போது ஆபத்தானது. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அளவுக்கதிக புரோட்டீன் உணவுகள் உங்கள் இதயநலனை பாதிக்கலாம், ஹார்ட் அட்டாக் ரிஸ்க்கை கொடுக்கலாம்.

அளவுக்கதிக புரோட்டீன் உடலுக்குள் போகும்போது இதயநோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக நிறைய ஆய்வுகள் வந்திருக்கின்றன. புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும். குறிப்பாக, அசைவ உணவுகளில் இருந்து உடலுக்குச் சேரும் புரதச்சத்தில் இந்த ஆபத்து இருக்கிறது. அதாவது ஒரு வேளைக்கு 25 கிராமுக்கும் அதிகமாக அசைவ புரதம் எடுக்கும்போது இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

இதய தமனிகளின் சுவர்களில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் படிவதால் ஏற்படும் ஒரு நிலையை  அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) என்று சொல்கிறோம்.  இது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற தீவிர உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

புரத உணவுகளில் உள்ள லூசின் (Leucine) என்ற அமினோ அமிலம், குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகரிக்கும்.

எனவே, உடல் எடைக்கேற்ற அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.  அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தைவிட, சைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம்தான் சிறந்தது, பாதுகாப்பானது. ஒருவேளை உணவில் 25 கிராமுக்கும் அதிகமாக புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இவற்றை எல்லாம் உங்கள் நண்பருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவரது உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை போன்றவற்றுக்கு எவ்வளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பற்றச் சொல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: ஹுசைனியை பாதித்த `ஏபிளாஸ்டிக் அனீமியா': ரத்தப் புற்றுநோயாக மாறியது எப்படி?

Doctor Vikatan: பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்குஏபிளாஸ்டிக் அனீமியா என்ற பிரச்னைபாதித்திருத்திருப்பதாகவும், அது பிளட் கேன்சர் எனப்படுகிற ரத்தப் புற்றுநோயாகமாறியதால், அவர் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருப்பத... மேலும் பார்க்க

Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் கோடைக்காலத்திலும் ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில்தானேபலருக்கும் ஜலதோஷம் பிடிக்கும்.... எனக்கோ, எல்லா சீசன்களிலும் ஜலதோஷம் இருக்கிறது. கொளுத்தும் கோடைக்காலத்தில்கூடஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதன... மேலும் பார்க்க

Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா?

தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அத... மேலும் பார்க்க

America: 3.6 மில்லியன் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு... பின்னணியில் எலான் மஸ்க்! - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அறிவிப்புகள், சில சில அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்க அரசு அலுவலகங்களின் கிட்டதட்ட 2 லட்சம் கிரெ... மேலும் பார்க்க

Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!

இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக இருவழி பயண அட்டை, விருப்பம்போல் பயணிக்க மாதாந்திர பயண அட்டை என பல்வேறு சலுகை கட்டணங்களை மாநகர் போக்குவரத... மேலும் பார்க்க