செய்திகள் :

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதில் மென்மையான பெண் குரல்; இதை சிகிச்சையால் சரி செய்ய முடியுமா?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு 19 வயதாகிறது. அவனுக்கு குரல் மிக மென்மையாக, பெண் தன்மையுடன் இருக்கிறது. இதனால் நண்பர்கள் மத்தியில் கிண்டல், கேலிக்கு உள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை கொள்கிறான். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

பியூபர்ஃபோனியா (Puberphonia)

ஒருவரின் குரலின் தன்மை என்பது அவரது குரல் நாணின் நீளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மகனுக்கு இருப்பதாகச் சொல்லும் இந்தப் பிரச்னைக்கு மருத்துவத்தில் 'பியூபர்ஃபோனியா'  (Puberphonia) என்று பெயர். இந்தப் பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில்  தீர்வும் இருக்கிறது.

சிகிச்சை

ஸ்பீச் தெரபியோ, அறுவை சிகிச்சையோ கொடுக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிகிச்சையைத் தொடங்கும்முன், எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்து, குரல் நாணின் நிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள, வேறு சில டெஸ்ட்டுகளும் மேற்கொள்ளப்பட வேண்டி வரலாம்.

டெஸ்ட்டுகளின் ரிசல்ட்டை பொறுத்துதான் எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும்.

பெண்ணாக இருந்து குரலில் ஆண்தன்மை தெரிவதாகவோ, ஆணாக இருந்து குரலில் பெண் தன்மை தெரிவதாகவோ உணர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 18 வயது வரை காத்திருக்கலாம்.

எண்டோஸ்கோப்பி பரிசோதனை
எண்டோஸ்கோப்பி பரிசோதனை

ஸ்பீச் தெரபி

தியேட்டர் போன்று நடிப்புத் துறைகளில் உள்ள பலரும் தங்கள் குரல் வளத்தை மேம்படுத்திக்கொள்ள ஸ்பீச் தெரபி எடுப்பதைப் பார்க்கலாம்.

சரியான நேரத்தில், சரியான மருத்துவரை சந்தித்து, சரியான சிகிச்சையை எடுத்தால் 3 முதல் 6 மாதங்களுக்குள் சிகிச்சையின் பலனை உணர முடியும்.

சிலருக்கு ஸ்பீச் தெரபி பலனளிக்காமலும் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நீளத்தைச் சரிசெய்வதன் மூலம் குரலின் தன்மையையும் மாற்ற முடியும்.

தன்னம்பிக்கை

இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்கள் மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுங்கள். குரல் மட்டுமே ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிக்கும் விஷயமல்ல என புரிய வையுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

இளமையையும், அழகையும் குறைக்குமா சர்க்கரை? டயட்டீஷியன் சொல்வது என்ன?

’’சர்க்கரை விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அழகு தொடங்கி ஆரோக்கியம் வரை பல பிரச்னைகளை சர்க்கரை ஏற்படுத்தும்’' என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் சுஜாதா.சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்ல... மேலும் பார்க்க

பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வருமா? - ட்ரம்ப் கருத்தும், நிபுணர்கள் மறுப்பும்!

பாராசிட்டமால் அல்லது அசட்டாமினோபென் என அழைக்கப்படும் மாத்திரை, உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி, காய்ச்சல் குறைப்பு மருந்து ஆகும்.சமீபத்தில் இந்த மருந்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ர... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா: விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி வந்தால் எப்படி சிகிச்சை கொடுக்கப்படும்?

பூமியில் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்ல முடியும், சிசிச்சை பெற முடியும். ஆனால், விண்வெளியில் உடல்நிலை பாதித்தால், விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கரா சூரணம்’?

Doctor Vikatan:அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்? மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்னதான் மாற்று?

Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்... இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது ... மேலும் பார்க்க

Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்' இயக்கம்

சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்... மேலும் பார்க்க