செய்திகள் :

Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி வெளிநாட்டில் இருக்கிறாள். சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன்.  அது குறித்து விசாரித்தபோது, சரும அழகுக்காக அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகச் சொன்னாள். அது புதிய தகவலாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கருத்தடை மாத்திரைகள், கரு உருவாகாமல் தடுப்பவைதானே... அவற்றுக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். சருமநல மருத்துவர்களும் ஓரல் கான்ட்ராசெப்ட்டிவ் பில்ஸ் எனப்படும் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்பதுண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. எல்லோருக்கும் பொத்தாம்பொதுவாகப் பரிந்துரைக்க மாட்டார்கள்.

பருக்கள் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு ரெட்டினால் போன்ற  சில மருந்துகளை வாய்வழியே எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். அப்போது கூடவே கருத்தடை மாத்திரைகளையும் பரிந்துரைப்போம். ரெட்டினால் போன்ற சில மருந்துகள்  டெரட்டோஜேனிக் எஃபெக்ட் (Teratogenic effect)   கொண்டவை.  அதாவது, கர்ப்பகாலத்தில் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.  அதனால் வாய் வழி எடுத்துக்கொள்ளும் ரெட்டினால் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது, கர்ப்பம் தரித்துவிடாமலிருக்க, கர்ப்பத்தடை மாத்திரைகளையும் சேர்த்துக் கொடுப்போம்.

பருக்கள் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு ரெட்டினால் போன்ற சில மருந்துகளை வாய்வழியே எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். அப்போது கூடவே கருத்தடை மாத்திரைகளையும் பரிந்துரைப்போம்.

சில பெண்களுக்கு 'ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்' (Androgenism ) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது  ஆண் ஹார்மோன் அதிகம உள்ளதால், மீசை, தாடி முளைப்பது, முகம் முழுவதும் பருக்கள் ஏற்படுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இந்தப் பிரச்னைகளுக்கான சிகிச்சைகளிலும் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்பது உண்டு. இப்படி சருமநல பிரச்னைகளுக்கு மாத்திரைகளைப் பரிந்துரைக்கும்போது, வேறு சில பக்க விளைவுகளைத் தடுப்பதற்காக கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். அதாவது புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன், சருமத்துக்கு சில நன்மைகளைச் செய்யும் என்பதுதான் காரணம். மற்றபடி, வெறுமனே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சரும நலம் மேம்படும் என்பது தவறான நம்பிக்கை. 

கருத்தடை மாத்திரைகள் எல்லாம் ஹார்மோன்களை உள்ளடக்கியவை என்பதால் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் அவற்றை எடுத்துக்கொள்வது மிகமிக ஆபத்தானது.  மற்றவர் உபயோகிப்பதைப் பார்த்தோ, அவர்கள் சொல்வதைக் கேட்டோ, நீங்களும் அவற்றை உபயோகிக்க வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

அதிமுக உள்கட்சி விவகாரம்: ``தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை" - சி.வி.சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா?

Doctor Vikatan:வாய்ப்புண் என்பது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா... சாதாரண வாய்ப்புண்ணுக்கும் புற்றுநோய் புண்ணுக்குமான வித்தியாசங்களைஎப்படிக் கண்டறிவது... கூர்மையான பற்கள்வாய்ப் புற்றுநோயை ஏற... மேலும் பார்க்க

நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழ... மேலும் பார்க்க

`நடனமாடி கொண்டிருக்கும்போதே பெண் மரணம்!' - அதிர்ச்சி வீடியோ; மருத்துவர் சொல்வதென்ன?

நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் பரிணீதா ஜெயின். இவர் எம்.பி.ஏ ... மேலும் பார்க்க

ADMK: `ஜெயலலிதாவை அவமதித்து விட்டார்கள்; செங்கோட்டையன் செய்தது சரிதான்' -டிடிவி தினகரன் சொல்வதென்ன?

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர். ... மேலும் பார்க்க

ADMK: எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது ஏன்..? - ஜெயக்குமார் விளக்கம்

அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தது தொடர்பாகவும் அதற்கு செங்கோட்டையன் அளித்த வ... மேலும் பார்க்க