செய்திகள் :

Doctor Vikatan: நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம்.. முதுமை தோற்றத்தை தள்ளிப்போட எது பெஸ்ட்?

post image

Doctor Vikatan: தினமும் இரவில் முகத்துக்கு க்ரீம் தடவ வேண்டுமா... அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்.... நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா... எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

தினமும் காலையில் எழுந்ததும் முகம் கழுவுவது, குளிப்பது, பிறகு மேக்கப் செய்துகொள்வது என சில விஷயங்களை ரொட்டீனாக செய்கிறோம். அதைப் போலவே நைட் ரொட்டீனும் மிக முக்கியம்.  உங்கள் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து நைட் க்ரீம், சீரம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அன்றைய தினம் சருமத்துக்கு உபயோகித்த சன் ஸ்கிரீன், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டியது மிகமிக முக்கியம். முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய  வேண்டும். மேக்கப் போடும்பட்சத்தில் டபுள் கிளென்ஸ்கூட செய்ய வேண்டியிருக்கும்.  அதன் பிறகு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். இப்படி முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்துக்கு மீண்டும் அதற்கான மாய்ஸ்ச்சரைசரை கொடுக்க வேண்டும். இதுபோன்றதொரு நைட் ரொட்டீன் அனைவருக்கும் அவசியம்.

நைட் க்ரீமில் பல வகைகள் உள்ளன. எது, யாருக்கு என்பது வயதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  20 முதல் 25 வயது வரை வெறும் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் போட்டாலே போதுமானதாக இருக்கும்.

பருக்கள், மங்கு போன்ற ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்தப் பிரச்னைக்கேற்ற நைட் க்ரீமை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் என இவற்றை ஆக்டிவ்ஸ் என்று சொல்வோம். எந்தப் பிரச்னைக்கான ஆக்டிவ் என்பது தெரிந்து அது உள்ள நைட் க்ரீமை பயன்படுத்தும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. சருமம் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கும். ஆனாலும், வயதாக, ஆக அந்தத் தன்மை குறைய ஆரம்பிக்கும்.

வெளிப்புறத்திலிருந்து அதைக் கொடுக்கும்விதமாக ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிக்கலாம்.  ஆன்டிஏஜிங் தன்மை உள்ளது என்றால், அதில் ரெட்டினாலுக்கு முதலிடம் உண்டு.

Skincare Tips

வயதுக்கேற்ப அதன் சதவிகிதம் மாறும். அதைப் பயன்படுத்தவென குறிப்பிட்ட வழிகளும் உள்ளன. சரும மருத்துவரை அணுகினால், உங்களுக்கான சரியான நைட் க்ரீமையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்வார்.

சீரம் என்பது நிறைய நல்ல தன்மைகளைக் கொண்ட சிறிய அளவிலான திரவ வடிவில் இருக்கும். இதை மிகக் குறைவாக உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும்.

சுத்தமான சருமத்தில் முதலில் சீரம் பயன்படுத்த வேண்டும்.  அது சருமத்தில் ஊடுருவிய பிறகு ஹைட்ரேட்டிங் தன்மையுள்ள மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் உபயோகிக்கலாம்.

ரெட்டினால் இருந்தாலே அது ஆன்டிஏஜிங் க்ரீம்தான். அத்துடன் பெப்டைட்ஸ், வைட்டமின் சி போன்றவை சேரும்போது இன்னும் முழுமையானதாக அமையும். காலையிலிருந்து இரவு வரை சருமம் சந்தித்த பாதிப்புகளைச் சரிசெய்ய நைட் கேர் ரொட்டீன் மிக மிக முக்கியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா?

இன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்... மேலும் பார்க்க

Miss Koovagam: விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி; ஏஞ்சலாக வந்த திருநங்கைகள் | Photo Album

திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டிமிஸ் கூவாகம் முதலிடத்தை திருநெல்வேலி ரேணுகா, இரண்டாமிடத்தை கள்ளக்குறிச்சி அஞ்சனா, மூன்றாமிடத்தை கோயம்புத்தூர் ஆஸ்மிகா வென்றனர்மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் கலந... மேலும் பார்க்க

Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெர... மேலும் பார்க்க

Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!

முட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்... மேலும் பார்க்க

Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!

வேலை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது. சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்... மேலும் பார்க்க

தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!

''காலேஜ் படிக்கிற பசங்க மீசை, தாடி வளரவும் நெற்றியில் வரும் வழுக்கையைச் சரி செய்யவும் டெர்மா ரோலர் பயன்படுத்துறாங்க. அதுவும், மருத்துவரைச் சென்று பார்க்காமல் வீட்டிலேயே இந்த டெர்மா ரோலரைப் பயன்படுத்தி... மேலும் பார்க்க