செய்திகள் :

Doctor Vikatan : பிள்ளைகளிடமிருந்து பெற்றோருக்கு வருமா ஆட்டிசம் பாதிப்பு? | Autism

post image

Doctor Vikatan: என்னுடைய தோழியின் 8 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், வேறு பிரச்னைகளுக்காக மனநல மருத்துவரை சந்திக்கச் சென்றிருந்தாள் என் தோழி. அப்போது அவளுக்கும் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். பொதுவாக பெற்றோருக்கு ஒரு பாதிப்பு இருந்தால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் வருவது இயல்பு... ஆனால், குழந்தையின் ஆட்டிசம் பாதிப்பு எப்படி பெற்றோரை பாதிக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மருத்துவர் சொன்ன தகவலை உங்கள் தோழியும் நீங்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. முதலில் அதில் தெளிவு பெறுங்கள். அதாவது, ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு சில பெற்றோர்கள் தங்களுக்கு ஆட்டிசம் இருப்பதை உணர்வது என்பது இயல்பானதுதான்.

ஆட்டிசம் என்பது ஒருவித மரபியல் குறைபாடு. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால், பெற்றோர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ ஆட்டிசம் தொடர்பான பண்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். முந்தைய தலைமுறையில் ஆட்டிசம் குறித்த விழிப்பு உணர்வு குறைவு. பலரும் தமக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அதுவே, பின்னாளில் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பாதிப்பு இருப்பது தெரியவரும். அதன் தொடர்ச்சியாக மருத்துவருடனான உரையாடலில், பரிசோதனையில், பெற்றோருக்கும் அந்த பாதிப்பு ஏற்கெனவே இருந்ததை மருத்துவர் சொல்வார். 

இன்னும் சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பது தெரிந்ததும், அது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவார்கள். அப்போது அவர்கள் கேள்விப்படுகிற, பார்க்கிற பல அறிகுறிகள், நடத்தை பிரச்னைகள் தங்களுக்கும் ஏற்கெனவே இருந்ததை உணர்வார்கள். 

தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போல அல்லாமல் பெற்றோர்கள் மிதமான அறிகுறிகளோடு வாழ்ந்திருப்பார்கள். எனவே, பிற்காலத்தில் இது தெரியவரும்போது, 'ஆட்டிசமா... எனக்கா.... நான் நல்லாத்தானே படிச்சேன்... நல்லாத்தானே வேலை பார்த்தேன்...' என்று அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.  தங்களுக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்ட பெற்றோர்கள், முதலில் அதை ஏற்றுக்கொண்டு, தங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தையையும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். தேவைப்பட்டால் பெற்றோரும் உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி இது குறித்து குற்ற உணர்வு கொள்வதோ, குழம்புவதோ தேவையில்லாதது. 'என்னைப் போல ஒருவன் அல்லது ஒருத்தி' என குழந்தையை அரவணைத்து, சிறப்பாக வளர்க்க முயற்சி செய்வதுதான் சரியான அணுகுமுறை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மதுரை: ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு உணவு; அரசு மருத்துவமனை வருபவர்களுக்காகச் சேவை; அசத்தும் அமைப்பு

தென் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையான மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.அப்படி வருகின்றவர்களுக்குத் தினமும் 3 ஆயிரம் வீதம் கடந்த ... மேலும் பார்க்க

Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, ஆண்டு முழுவதும் கிடைக்கிற இளநீரே சுவையான தீர்வு. இளநீரின் ஆரோக்கிய பலன்கள் பற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என்மகளுக்கு17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது. அதன் காரணமாக தூக்கமில்லாமலும்அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுக... மேலும் பார்க்க

Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை... தீர்வு என்ன?

கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு.SUMMERSummer Heal... மேலும் பார்க்க

Physical Vs chemical sunscreen: எது சருமத்திற்கு பாதுகாப்பானது? - Doctor Tips

ஸ்கின் கேரில் முக்கியமான ஒன்று சன் ஸ்கிரீன். வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதில் ஒன்று இந்த சன் ஸ்கிரீன். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் மருத்... மேலும் பார்க்க

கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?

கோடை வெயிலாக இருந்தாலும் சரி, மழை மேகமாக இருந்தாலும் சரி, சிலர் டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக சூடான சம்மரில் எப்படி டீ குடிக்கிறார்கள் என்று யோசித்திருப்போம்.ஆனால் கோடை காலத்தில் ... மேலும் பார்க்க