செய்திகள் :

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

post image

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு 'வேப்பங்காரம்' என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு, தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த வேப்பங்காரம் கொடுக்கலாம்.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேம்பு நம் மருத்துவத்தில் முக்கியப் பொருளாக இருந்திருக்கிறது. அது தொல்காப்பியத்தில்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வளவு பழைமையான, பாதுகாப்பான மருந்து வேம்பு.

வேப்பங்கொழுந்து 5 எண்ணிக்கை, ஒரு மிளகு, 10 சீரகம் ஆகியவற்றை நன்கு நுணுக்கி சுத்தமான, வெள்ளைத் துணியில் கட்டி முடிந்துகொள்ளவும்.  அதை  15 மில்லி தாய்ப்பாலில் ஊறவைக்கவும். 

குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள்.

குழந்தைக்கு எண்ணெய் தடவும்போதே இதை ரெடி செய்துவிட வேண்டும். பிறகு குழந்தையைக் குளிப்பாட்டி முடிக்கும்வரை இந்த மருந்து, தாய்ப்பாலில் ஊறிக்கொண்டிருக்கும்.

குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள்.

வேப்பங்காரம் கொடுத்த சில நொடிகளில், குழந்தைக்கு சளி கட்டியிருந்தால், அதைக் கக்கி விடும். பிறகு அதைச் சுத்தம் செய்து, குழந்தையைத் துடைத்து எடுப்பார்கள். இது காலங்காலமாக கிராமங்களில் பின்பற்றப்படுகிற விஷயம்தான். பயப்படத் தேவையில்லை.

வேப்பங்கொழுந்து உள்ளிட்ட மருந்துப் பொருள்களை நுணுக்குவது, தாய்ப்பாலை எடுப்பது, ஊறவைப்பது என எல்லாவற்றையும் மிகமிகச் சுத்தமாகக் கையாள வேண்டியது அவசியம்.

வேப்பிலை
வேப்பிலை

பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்துவோம். அந்தக் குழந்தையின் குடலானது வாரந்தோறும் வளர்ச்சி அடையும்.

அந்த மாற்றங்களால் குழந்தையின் வயிற்றில் வாய்வு சேரும். திடீர் திடீரென குழந்தை வலியால் அழும். அந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வேப்பங்காரம் உதவும்.

நெஞ்சில் சளி சேராமல் தடுக்கும். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.  12 வயது வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம். வயதாக, ஆக, வேப்பங்கொழுந்து,  சீரகத்தின் எண்ணிக்கையை ஐந்து, ஐந்தாகவும், மிளகின் எண்ணிக்கையை ஒன்றிரண்டாகவும் அதிகரித்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் மாமியார் கொடுக்கும் இந்த வேப்பங்காரம், குழந்தைக்கு நிச்சயம் நல்லதுதான் செய்யும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி... மேலும் பார்க்க

வயிற்றுப்போக்கு முதல் மலேரியா வரை; மழைக்கால நோய்களைச் சமாளிப்பது எப்படி?

எத்தனைக் கொடுமையான வெயிலையும் அனுசரிக்கப் பழகிவிடும் நாம், சட்டெனப் பெய்யும் மழையில் தத்தளித்துப் போகிறோம். மழைக்காலத்தில் வீட்டில் நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், வெளியில் இருந்து வீட்டுக்கு... மேலும் பார்க்க

சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து, திருச்சியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பெருக்கும் நோக்கில் 'ரன் ஃபார் ஹோப்' மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.2 கிமீ, 5 கிமீ மற்றும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா?

Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர்... மேலும் பார்க்க

டாக்டர் திலீப்பும் டாக்டர் சிவரஞ்சனியும்; இது ORS பிறந்த கதையும் அது மீண்ட கதையும்!

உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்பு ஒன்று, வணிகரீதியான பொருளாக மாற்றப்பட்டால், அதனால் மக்களுக்கு என்னவெல்லாம் கெடுதல்கள் நடக்கும் தெரியுமா? அதற்கு முன்னால் அந்த உயிர் காக்கும் மருந்தின் பெயர் என்ன; ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு, தானாகச் சரியாகிவிடுமா? தாய்ப்பால் வழியே சர்க்கரை பரவுமா?

Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன.இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் எ... மேலும் பார்க்க