செய்திகள் :

Doctor Vikatan: பெண்கள் தினமும் இரவில் பால் குடிக்கலாமா... அது உடல் எடையை அதிகரிக்குமா?

post image

Doctor Vikatan: என் வயது 48. எனக்குப் பல வருடங்களாக இரவில் தினமும் பால் குடிக்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தினமும் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அதைத் தவிர்க்க வேண்டும் என்றும்  ஒரு வீடியோவில் பார்த்தேன். இது உண்மையா...? பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பெண்கள் கட்டாயம் தினமும் பால் குடிக்க வேண்டும். பாலில் அபரிமிதமான கால்சியம் சத்து உள்ளது. அது பெண்களின் உடல்நலத்துக்கு, குறிப்பாக அவர்களின் எலும்புகளின் நலத்துக்கு மிக மிக முக்கியம்.

பால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில் பல பெண்களும் அதைத் தவிர்ப்பதாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். பால் குடிப்பதால் உடல் எடை அதிகரித்துவிடாது. ஏனெனில் 100 மில்லி பாலில் வெறும் 85 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆனால், அதில் 3.2 கிராம் அளவு புரதச்சத்து இருக்கிறது. அதுவும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது. எனவே, பால் குடிக்கப் பிடிக்கும் என்பவர்கள், அதில் இனிப்பு சேர்க்காமல், மஞ்சள் தூளோ அல்லது குங்குமப்பூவோ சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

பால் மற்றும் பால் பொருள்களான தயிர், மோர், பனீர், சீஸ்

சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கான தேர்வுகள் குறைவு. அந்தச் சத்துகளை பால் மற்றும் பால் பொருள்களான தயிர், மோர், பனீர், சீஸ் போன்றவற்றில் இருந்து  பெற முடியும்.  அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலுமே, தினமும் அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவர்களுமே பால் குடிக்கலாம். சிலருக்கு பால் குடித்தால் ஏற்றுக்கொள்ளாது. லாக்டோஸ் இன்டாலரென்ஸ் (Lactose intolerance) என்ற பிரச்னை இருக்கலாம். பால் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்பவர்கள் மட்டும் அதைத் தவிர்த்தால் போதும்.

பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிக முக்கியம். குறிப்பாக, மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புகள் வலுவிழக்கும் ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்பு மிக அதிகம். அதைத் தவிர்க்கவும் கால்சியம் சத்து முக்கியம் என்பதால் பால் குடிப்பது அவசியமாகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..!

ஒரு பெண்ணை வளைவு நெளிவுகளுடன், மார்பகங்களில் கொழுப்புத் திசுக்களுடன் பெண்மையாகக் காட்டுவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். இதைத் தவிர, ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு செய்கிற மற்ற நன்மைகள் என்னென்ன; ஒரு பெண்ணின் உடல... மேலும் பார்க்க

Doctor Vikatan: 55 வயதிலும் தொடரும் பீரியட்ஸ்... சந்தோஷமா, சங்கடமா?

Doctor Vikatan: என்உறவுக்கார பெண்ணுக்கு 55 வயதாகிறது. இன்னும் பீரியட்ஸ் நிற்கவில்லை. 'நின்னாதான் பிரச்னை... மெனோபாஸ் கஷ்டங்களைத் தாங்க முடியாது. பீரியட்ஸ் வந்தா நல்லதுதான்' என்கிறார். இது சரியானதுதானா... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

நம் குடும்ப அமைப்பு, ‘குழந்தை பெற்றுக் கொண்டால்தான் நீ பெண் என்கிற முழுத் தகுதியை அடைவாய்’ என்றே காலங்காலமாக பெண்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால், ‘ஆண் குழந்தைதான் வேணும்’... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா?

Doctor Vikatan: என்உறவுக்கார பெண்ணுக்கு 60 வயதாகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாகவேஅவருக்கு அடிக்கடி வயிற்றுவலி, வயிற்று உப்புசம், அஜீரணம் என வயிறு தொடர்பான பிர... மேலும் பார்க்க