தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர்
Dragon: "நட்பு, நண்பர்கள்தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம்" - நெகிழ்ந்த விஜே சித்து
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் இம்மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் `டிராகன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் 'தனது வளர்ச்சிக்கு நண்பர்கள்தான் காரணம்' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் பிரபல யூடியூபரும், நடிகருமான விஜே சித்து.
யூடியூப் சேனல் ஆரம்பித்து 2 லட்சம் சப்ஸ்கிரைபர் இருந்தபோதே நடிக்கக் கூப்பிட்டார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. எங்க சேனலோட 11வது சப்ஸ்கிரைபர் அஸ்வத் ப்ரோதான்.
முதல் நாள் கதை கேட்கும்போதே இங்கிலீஷ்ல பேசினார். எனக்கு ஒன்னும் புரியல. சரி நம்ம ஹாலிவுட் படத்துல நடிக்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டேன். செட்டுக்குப் போனா அங்கயும் கேமரா மேனும், இயக்குநரும் இங்கிலீஷ்லயே பேசுறாங்க. எதோ ஜாக்கி ஜான் படம் படசெட்டப் பார்த்த மாதிரி இருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/kqe2qzo3/Screenshot-67.jpg)
இதுக்கு முன்னாடி ஒரு 2 படம் பண்ணினேன் செட்ல எது கேட்டாலும் கிடைக்காது. சாப்பாடுகூட நம்மதான் எடுத்துட்டுப் போகணும். இந்தப் படத்துல 'ஏ ஜி எஸ்' நிறுவனம் நல்லா சாப்பாடு போட்டாங்க. என்ன கேட்டாலும் கிடைச்சது. பிரதீப் ப்ரோ நிறைய சாப்பிடுவார், ஆனா ஃபிட்டா இருப்பார்.
எங்க அப்பா இன்னும் நான் படத்துல நடிக்கிறேன்னு நம்பல. 'வீட்டுல நடிப்ப, இப்போ கேமரா முன்னாடி நடிக்கிற அவ்வளவுதான்'னு சொன்னார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/xxoc6y3r/The-internet’s-favorites-have-arrived-vjsiddhuofficial-khanharshathkhan-light-up-the-DragonPreRelease-event-with-their-charm-Catch-it-Live-on-the-AGS-Entertainment-YouTube-Channel-LINK-IN-STO.jpg)
நட்பு, நண்பர்கள்தான் நான் இந்த மேடையில் நிற்கக் காரணம். என் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் நண்பர்கள்தான் காரணம். எங்களை சப்போர்ட் பண்ண அத்தனைபேரும் எங்களின் நண்பர்கள்தான் அவர்களுக்கு நன்றி. எங்களை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த அஸ்வத்திற்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.