செய்திகள் :

Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்

post image

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 `டூட்' படம்
`டூட்' படம்

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் சாய் அபயங்கரின் பெற்றோரும், பிரபல பாடகர்களுமான திப்பு - ஹரிணி இருவரும் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது சாய் அபயங்கர் குறித்து மேடையில் பேசிய திப்பு, “சாய் அபயங்கருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி.

அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவான் என்று எங்களுக்குத் தெரியாது.

அன்றைக்குத்தான் ‘Think Music’ஓட ‘கட்சி சேரா’ பாடல் வெளியானது.

இன்றைக்கு அவன் இப்படி ஒரு இடத்திற்கு வருவதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும் தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி” என்று கூறியிருக்கிறார்.

சாய் அபயங்கரின் பெற்றோர்
சாய் அபயங்கரின் பெற்றோர்

தொடர்ந்து பேசிய ஹரிணி, “என் பையனுக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்குக் கிடைத்த மாதிரி இருக்கிறது.

அவனுடைய கடின உழைப்பிற்காகவே மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவார். எங்களுக்கே அது வியப்பாகத்தான் இருக்கும்.

சாய்க்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Dude: "இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம்" - சாய் அபயங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Raashi kanna: `என் நிறமற்ற இதயத்தில் வானவில் நீயடி' - ராஷி கன்னா லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

kalyani priyadarshan: `அப்தி அப்தி...' - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album மேலும் பார்க்க

``மதராஸி பிளாக்பஸ்டர் ஹிட்" - ஏ.ஆர்.முருகதஸை கலாய்த்த நடிகர் சல்மான் கான்!

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியின் மே... மேலும் பார்க்க

Dude: 'எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்.!' - உருவக்கேலி குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: "நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே"- பிரதீப்பைச் சீண்டிய கேள்வி; சரத்குமாரின் பளீச் பதில் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியிருக்கும் படம் டுயூட். இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய வ... மேலும் பார்க்க

``சேது படம் அப்போ அந்த ரெண்டு பேருக்கு ரசிகர்கள் கூடிட்டே இருந்தாங்க; அப்போ விக்ரம் கிட்ட" - அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.இப்படம் தீ... மேலும் பார்க்க