வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
GBU: 'கடைசி வரைக்கும் புரியாமலேயே இந்தப் படத்துல நடிச்சுட்டேன்'- 'குட் பேட் அக்லி' குறித்து பிரசன்னா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly). `விடாமுயற்சி' திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அஜித்துடன் நடிகர் சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நேற்றைய தினம் திரைப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்த படக்குழு, இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி விழாவை நடத்தி இருக்கிறது.

படக்குழுவைச் சேர்ந்த பலரும் இந்த வெற்றி விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் பங்கேற்று பேசிய பிரசன்னா, " ரொம்ப நாளைக்கு பிறகு வெற்றி விழாவுல சந்திக்கிறதுல மகிழ்ச்சி.
நான் காலேஜ் படிக்கும்போது சினிமாவுக்கு வரணும்னு நான் ஆசைப்பட்டதுக்கு காரணம் அஜித் சார்தான். 'மங்காத்தா' படம் பண்ணும்போது வெங்கட் பிரபு சார் நீங்க அதுல இருக்கீங்கன்னு சொன்னாரு. அப்புறம் நான் அதுல நடிக்க முடியாமல் போயிடுச்சு.
அதே மாதிரி சில வாய்ப்புகள் வந்து மிஸ் ஆகிடுச்சு. இப்போது அந்தக் கனவு நடந்திருக்கு. எனக்கு கடைசி வரைக்கும் ஆதிக்கோட பிலிம்மேக்கிங் புரிஞ்சுக்கவே முடியல. படப்பிடிப்புல ஒரு நாள் எனக்கு ஷூட் இல்லனு தூங்கிட்டு இருந்தேன். அப்போ வந்து திடீர்னு கூப்பிட்டு புன்னகை அரசி டைலாக் பேசச் சொன்னாங்க. அப்படிதான் அந்த வசனம் பேசினேன்.

விருப்பமில்லாமல்தான் அதை பண்ணினேன் (சிரித்துக் கொண்டே ). கடைசி வரைக்கும் ஆதிக் என்ன எடுக்குறார்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஆதிக்கூட அடுத்த முறை படம் பண்ணும்போது கதையை புரிஞ்சு பண்ணனும்னு ஆசைப்படறேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...