செய்திகள் :

Genelia: ``காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய்..."- நடிகை ஜெனிலியா குறித்து இயக்குநர் S.S ராஜமௌலி

post image

கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் காலி ஜனார்த்தன் ரெட்டியின் மகன் கிரீட்டி ரெட்டி. இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் படம் ஜூனியர். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா தேஷ்முக் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஜெனிலியா தேஷ்முக்
ஜெனிலியா தேஷ்முக்

அப்போது நடிகை ஜெனியா குறித்து பேசிய இயக்குநர் ராஜமௌலி, ``ஜெனிலியா தேஷ்முக் தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஜெனிலியா காலத்தால் உறைந்து அப்படியே இருக்கிறாய். எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டபிறகும், அப்போது பார்த்த மாதிரியே இருக்கிறாய்.

இந்தப் படத்தில் ஒரு புதிய ஜெனிலியாவைப் பார்ப்போமா என்று ஒளிப்பதிவாளர் செந்திலிடம் கேட்டேன். அவர் நிச்சயம் என உறுதியளித்தார். நான் அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார். இந்தப் பாராட்டு குறித்து நடிகை ஜெனிலியா தன் எக்ஸ் பக்கத்தில் ராஜமௌலியை குறிப்பிட்டு, ``நீங்கள் மிகவும் அன்பானவர். உங்கள் வார்த்தைகள் எனக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை கீர்த்தி சுரேஷ்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'உப்பு கப்புறம்பு' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனத்த... மேலும் பார்க்க

Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி படம் வொர்க் ஆகிறதா?

சிட்டி ஜெயபுரம் என்ற புனைவு கிராமம். அதன் தலைவர் இறந்துவிடுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் மகளான அபூர்வா (கீர்த்தி சுரேஷ்) ஊர் தலைவர் நாற்காலியில் அமர்த்தப்படுகிறார். ஊர் தலைவர் பதவியில் துளிய... மேலும் பார்க்க

Prabhas: சிறுநீரக கோளாறால் உயிருக்கு போராடும் நடிகர்; ரூ.50 லட்சம் கொடுத்து உதவ முன்வந்த பிரபாஸ்

'பன்னி', 'அதிர்ஸ்', 'தீ' மற்றும் 'மிரப்காய்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ஃபிஷ் வெங்கட். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார... மேலும் பார்க்க

'சில கதைகள் மட்டும்தான் இந்தியா முழுவதற்கும் வெளியாவதற்குத் தகுதியானது'- நாகர்ஜுனா சொல்வது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

'என் தந்தை கடவுள் மறுப்பாளர்; இந்தப் படத்தைப் பார்க்கும்போது...'- 'கண்ணப்பா' படம் குறித்து ராதிகா

மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’. ச... மேலும் பார்க்க

"என் 5 படங்களின் கதையையும் அந்த ஹீரோவிடம்தான் முதலில் சொன்னேன், ஆனால்..!" - 'சூர்யா 46' இயக்குநர்

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. 'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவி... மேலும் பார்க்க