செய்திகள் :

Goa: "கோவா படத்தின் என் கேரக்டரை வச்சு என் மகளைக் கிண்டல் பண்ணப்ப..." - நடிகர் சம்பத் ராஜ்

post image

நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'குட் வைஃப்' வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதே தலைப்பிலான அமெரிக்க வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இதனை எடுத்திருக்கிறார்கள். இந்த சீரிஸில் ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Good Wife Web Series
Good Wife Web Series

இந்த சீரிஸின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

இதில் நடிகர் சம்பத் ராஜ், 'கோவா' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை வைத்து தனது மகளைக் கிண்டல் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோவா' திரைப்படத்தில் சம்பத் ராஜ் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பார்.

"இந்த சீரிஸில் நீங்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தைப் பலரும் தேர்வு செய்து நடிப்பதற்குத் தயங்குவார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?" என்ற கேள்விக்குப் பதிலளித்த நடிகர் சம்பத் ராஜ், "இது வெறும் ஒரு கதாபாத்திரம்தான். இப்படியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சேலஞ்ச் தேவையில்லை. நம்பிக்கைதான் தேவை. எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.

எனக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. அதையெல்லாம் மீறி நாம் வேறு ஒரு விஷயத்தைச் செய்யப் போகிறோம். அதில் நாம் நம்பிக்கையாக இருப்பதுதான் முக்கியம்.

முக்கியமாக, இந்த சீரிஸில் நான் நடிப்பதற்கு முன்னால் என் குடும்பத்தில் யாரைக் கேட்க வேண்டுமோ, அவர்களைக் கேட்டேன். நான் இதைச் செய்யப் போகிறேன், சரியா என்று கேட்டு உறுதி செய்த பிறகுதான் நடித்தேன்.

என்னுடைய மகள் 4-ம் வகுப்பு படிக்கும்போது, நான் 'கோவா' படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை வைத்து என் மகளைக் கிண்டல் செய்தார்கள்.

என் மகள் அப்போது சிறு பெண்ணாக இருந்தாள். நிறைய பேர் பல விஷயங்களைச் சொல்லும்போது, என் மகளுக்கு என்ன பதில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது.

இப்போது அவள் வளர்ந்துவிட்டாள். ஆனாலும் நான் அவளிடம் கேட்க வேண்டும். அதே சமயம், என் வாழ்க்கையில் இருக்கும் இன்னொரு பெண்ணிடமும் கேட்க வேண்டும்.

அப்படி இந்தக் கதாபாத்திரம் பற்றி விளக்கி, அவர்களின் கருத்தையும் கேட்ட பிறகுதான் நடித்தேன்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``பாதாள சாக்கடை பிரச்னைய என்கிட்ட சொல்றாங்க; மாநில அரசின் கீழ் வருகிறது என்றால்..'' - கங்கனா ஆதங்கம்

திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் கங்கனா ரனாவத் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் வாழ்க்கை ... மேலும் பார்க்க

நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

நடிகர் கிங் காங் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரி... மேலும் பார்க்க

Sam C.S: "இயக்குநர்கள் இசையை இரைச்சலாக்குகிறார்கள்..." - ஓப்பனாக பேசிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர... மேலும் பார்க்க

Karthi 29: நாளை Take Off ஆகும் கார்த்தி 29; இணையும் மலையாள ஹீரோ; ஹீரோயின் யார் தெரியுமா?

கார்த்தியின் 29வது படத்திற்கான படப்பூஜை நாளை நடக்கிறது. இந்தாண்டில் அவர் சத்தமில்லாமல் 'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வே... மேலும் பார்க்க

Negative Reviews: "படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது" - பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பெரிதளவில் பேசப்பட்ட அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, அவருடைய அடுத்த படத்திற்குப் பலரும் காத்திருக்கின்றனர். ... மேலும் பார்க்க