டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?
அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வலையமைப்புதான் விக்கிபீடியா.
அதே நேரம் விக்கிபீடியா இடதுசாரி சார்பில் செயல்படுவதாக எலான் மஸ்க் போன்ற சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், எலான் மஸ்க் க்ரோக்பீடியா என்ற ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``க்ரோக் பீடியா சிறந்த தகவல்களை ஒருங்கிணைத்து விண்வெளியில் சேமிக்கப்படும். அனைத்து தகவலின் விரிவான தொகுப்பை உருவாக்கி, அதை சந்திரன், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலையான ஆக்சைடில், லேசர் மூலம் மைக்ரோ எழுத்துருவில் பொறிக்கப்படும். அந்த நகல்கள் எதிர்காலத்திற்காகப் பாதுகாக்க வைக்கவும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்
விக்கிபீடியாவின் கட்டுரைகள் ஒரு சில நபர்களால் தங்கள் சொந்த கருத்துகளை அவற்றில் சேர்க்க முடியும். க்ரோகிபீடியா AI-ல் எழுதப்பட்டது. இது முழு இணையத்தையும் ஸ்கேன் செய்து, பின்னர் சுயாதீனமாக சர்ச்சைக்குரிய பிரச்னைகளின் இரு பக்க கருத்துகளையும் சேர்க்க முயற்சிக்கிறது.
க்ரோகிபீடியாவின் AI, மனித ஆசிரியர்களை விட அதிகமான விஷயங்களைப் படிக்க முடியும், மேலும் அதன் கட்டுரைகளின் அகலத்திலும் ஆழத்திலும் விரைவில் விக்கிபீடியாவை விஞ்சிவிடும் என எலான் மஸ்க் நம்புகிறார்.
மேலும், மனித அறிவை அழிக்கும் ஒரு பேரழிவு நிகழ்வு ஏற்பட்டால், சூரியக் குடும்பத்தில் சேர்த்து வைக்கப்படும் தகவல்கள் மூலம் அந்த அறிவை மீட்டுருவாக்கம் செய்யலாம் எனக் கருதப்படுகிறது.
















