செய்திகள் :

HBD Ajith Kumar: கேமராக் காதலன், பைக் சேகரிப்பு!; அஜித் பற்றி பலரும் அறிந்திடாத பர்சனல் தகவல்கள்!

post image

நடிகர் அஜித்தின் 54-வது பிறந்தநாள் இன்று.

'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி, பத்ம பூஷன் விருது என பல ஸ்பெஷல் விஷயங்களோடு இந்தப் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித்.

அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இங்குப் பார்க்கலாம்.

அஜித்குமார்
அஜித்குமார்

* தன் வீட்டில் நெடுங்காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே உரிமையாக்கி பத்திரப்பதிவும் செய்து கொடுத்துவிட்டார்.

* அஜித் முன்பெல்லாம் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற நாள்கள் உண்டு. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத காரணத்தால் அவர் அங்கே போய்  15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

* ஆன்மீகம், ராசி, ஜோதிடம் பார்ப்பதில் நம்பிக்கை உண்டு. ஆனால் 'எம்மதமும் சம்மதம்' என்ற கொள்கையை பின்பற்றுவார். அந்த நம்பிக்கையையும் மற்றவர்களின் மேல் திணிக்க மாட்டார்.

* விதவிதமான பைக்குகளை பிரியமாக சேகரித்து வைத்திருக்கிறார் அஜித். இப்போதுள்ளதெல்லாம் நினைத்துக்கொண்டால் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அடுத்த தடவை சிக்னலில் வாட்டசாட்டமாக பைக்கில் இருப்பவரை கவனியுங்கள். அஜித்தாக இருக்கலாம்.

அஜித்
அஜித்

* பைக்கிலேயே 25 நாள் பயணமாக டேராடூன் வரை போய்விட்டு 9 நாள் பயணமாக கைலாஷ் போய் வந்திருக்கிறார். பயணத்தை விரும்புவதற்கு காரணங்களாக , '' புதுப் பயணிகள், பாதை மற்றும் எனக்குள் நான் செய்த பயணம் ''என்பார்.

* கேமராக்களின் காதலன். நண்பர்களையும், கூட நடிக்கிற எளிய நடிகர்களுக்கும் புகைப்படம் எடுத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்தி அனுப்புவதை விரும்புவார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதி... மேலும் பார்க்க

HBD Ajith Kumar: `பைக் மெக்கானிக் டு பத்ம பூஷன்' - சினிமாவை தாண்டி அஜித் செய்த ஓஜி சம்பவங்கள்!

நடிகர் அஜித்துக்கு 54-வது பிறந்தநாள் இன்று. எப்போதும் இல்லாததைவிட இந்த வருட பிறந்தநாள் அஜித்துக்கு ரொம்பவே ஸ்பெஷல். 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிப் பேச்சு குறைவதற்குள், பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற... மேலும் பார்க்க

15 Years of Sura: ''சுறாவைத் தோல்வி படமாகச் சித்தரித்த நபர்; காரணம்..." - எஸ்.பி ராஜ்குமார் பேட்டி

விஜய்யின் 50-வது படமான 'சுறா' ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.விஜய்யின் 50-வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை எகிறவைத்த 'சுறா' எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்று சொல்லப்பட்டுகிறது.இந்தநி... மேலும் பார்க்க

Retro: "அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன்..." - மே 1 வெளியாகும் படங்களுக்கு சூர்யா வாழ்த்து!

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்... மேலும் பார்க்க

What to watch on Theatre: ரெட்ரோ, Tourist Family, HIT - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரெட்ரோ (தமிழ், தெலுங்கு, இந்தி)Retroகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படத்தில்,பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தம... மேலும் பார்க்க

Ajith: "அஜித் சார் விருது வாங்கினது பெருமை!" - நடிகை ஷாலினி பேட்டி

நடிகர் அஜித் நடிப்பு, ரேஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றிருந்தார் நடிகர் அஜித். விருது பெறும் தருணத்... மேலும் பார்க்க