செய்திகள் :

International Women's Day: பெண்களின் வருமானம் 'ஆப்ஷனல்' அல்ல... அத்தியாவசியம்! #AccelerateAction

post image

50 ஆண்டுகள்... 600 மாதங்கள்... 2,609 வாரங்கள்... 18,263 நாட்கள்...

இந்த உலகம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடத் தொடங்கி இவ்வளவு காலங்கள் ஆகிவிட்டன. 1975-ம் ஆண்டு, முதன்முறையாக மார்ச் 8-ஐ சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது ஐ.நா அறிவித்தது.

அரை நூற்றாண்டை கடந்துவிட்ட இந்தக் கொண்டாட்டத்தின் இந்த ஆண்டு தீம் 'Accelerate Action'. அதாவது ஒரு செயலை வேகப்படுத்துதல் ஆகும். இது பாலின சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகளையும், நடைமுறைகளையும் வேகப்படுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஆம்... இன்னும் அடையவில்லை தான்...

எழுத்து சதவிகிதமும், தொழிலாளர் சதவிகிதமும்...

ஆம்... இன்னும் அடையவில்லை தான்... ஆனால், நிச்சயம் அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை தாண்டியும்... இன்னமும் வேகமெடுத்து போய்கொண்டிருக்கிறது. இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் என்று தரவுகள் கூறுகின்றன.

இவர்களின் எழுத்தறிவு விகிதத்தை பார்க்கும்போது, இந்திய அளவில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 84.7 சதவிகிதமாகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 77 சதவிகிதமாகவும் இருக்கின்றது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2022-23-ல் பெண்கள் தொழிலாளர் பங்களிப்பு விகிதத்தில் 37 சதவிகிதமாக இருந்திருக்கின்றது. இந்த சதவிகிதம் ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

சந்தோஷப்படுங்கள்...

2022-ம் ஆண்டு தரவுகளின் படி, உலக அளவில் 15 வயதான பெண்களின் எழுத்தறிவு விகிதம் 83.78 சதவிகிதமாக இருந்துள்ளது. ஆண்களின் எழுத்தறிவு விகிதமோ 90.48 சதவிகிதமாக இருந்துள்ளது.

உலகளவில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 50 சதவிகிதம்; ஆண்களின் பங்களிப்போ 72 சதவிகிதம்.

இந்தத் தரவுகளையும், சதவிகிதங்களையும் பார்க்கும்போதே, பெண்ணும், ஆணும் இன்னும் சமத்துவம் அடையவில்லை என்பது தெரியும். ஆனால், இதைக்கண்டு வருத்தப்பட துளியும் தேவையில்லை. மாறாக சந்தோஷம் தான் பட வேண்டும். 'என்னது சந்தோஷமா?' என்று குழம்பாதீர்கள்.

முதன்முதலாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்த 1975-ம் ஆண்டு, உலகளவில் 25 - 40 சதவிகிதம் தான் பெண்கள் தொழிலாளர் பங்களிப்பு சதவிகிதம். இந்த சதவிகிதம் வளர்ந்த, பணக்கார நாடுகளில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட தரவுகள் ஆகும்.

1975-ல் முதன்முதலாக...

வேகத்தை முடுக்குங்கள்!

ஆனால், இன்றோ உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் கல்வியிலும், பணியிலும் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கின்றனர். இப்போதைய தரவுகளின் முடிவு வெறும் பணக்கார நாடு, வளர்ந்த நாட்டை மட்டும் வைத்து எடுத்த முடிவு அல்ல என்பதே மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயம்.

மகிழ்ச்சிகரமான விஷயம்... பாசிட்டிவான விஷயம் என்று இத்தோடு நின்றுவிடக் கூடாது. இந்த ஆண்டின் தீமிற்கேற்ப, இந்த விஷயங்களை இன்னமும் வேகமாக முடுக்கிவிட தொடங்க வேண்டும்.

இந்தியாவை எடுத்துக்கொள்வோம்... இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. அடுத்ததாக, மூன்றாவது இடத்தைப் பிடிக்க மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெண்கள் தொழிலாளர் பங்களிப்பு வெறும் 37 சதவிகிதமாக போதாது. இன்னமும் அதிகம் வேண்டும்.

என்ன பயன்?!

மேலே கூறப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்த்தால் எழுத்தறிவு விகிதத்திற்கும், தொழிலாளர் பங்களிப்பு விகிதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரம். படித்து முடித்த அனைத்து பெண்களும் ஆபீஸ் வாசல்களை மிதிப்பதில்லை. இதற்கு காரணம், இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் படிப்பு வெறும் 'ஸ்டேட்டஸ்'களாகவே நின்றுவிடுகிறது.

இவர்களின் படிப்பு அடுத்த தலைமுறைக்கு சொல்லி தரும் முக்கிய இடத்தில் பங்காற்றுகிறது தான். ஆனால், அந்தப் படிப்பை படித்த பெண்களுக்கு அது என்ன செய்கிறது என்பது பெரிய கேள்விக்குறி. 'தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்' நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தனக்கு உதவாமல் மற்றவருக்கு மட்டும் உதவி என்ன பயன்?

2047-ல் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்!

தலைவர் சுனிதா வில்லியம்ஸ்...

பெண்களின் படிப்பை 'ஸ்டேட்டஸாக' பார்ப்பதை விட, 'அவர்கள் என்ன செய்துவிட போகிறார்கள்?' என்ற எண்ணம் இன்னமும் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அப்படி நினைப்பவர்களே... பெண்கள் அடுப்பு ஊதுவதை தாண்டி எத்தனையோ மைல்கள் வந்துவிட்டனர். இப்போது உலகத்தை மட்டுமல்ல... விண்வெளியையும் ஆள தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட 10 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக்கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் அந்தக் குழுவிற்கு தலைவராக நம்பிக்கையுடன் அதை வழிநடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்ல... ஜெனரல் மோட்டர்ஸ், அக்சன்சர் போன்ற பல பெரிய பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உலக முழுவதிலும் உள்ள அந்த நிறுவனங்களின் அத்தனை கிளைகளையும் நிர்வகித்து வருகின்றனர். இது அத்தனையும் அவர்களின் தலைமை பண்பையும், நிர்வாக திறனையும், ஆளுமையையும் காட்டுகிறது.

ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு வழியில் ஒரு குதிரையில் பயணிப்பதே மிகவும் சிரமம். ஆனால், பெண்கள் ஒரே நேரத்தில் குடும்பம், வேலை என்ற இரு வழிகளில் இரு குதிரைகளில் வேகமாகவும், கம்பீரமாகவும் பயணித்து கொண்டிருக்கின்றனர். அது தான் அவர்களின் 'வொர்க் லைஃப் பேலன்ஸ்'.

அடையாளம் முக்கியம் பிகிலு!

அடையாளம் முக்கியம் பிகிலு!

இதை எல்லாவற்றை விடவும் 'அடையாளம்' என்பது ரொம்ப முக்கியம். இதுவரை பெரும்பாலும் பெண்கள் 'இவரின் மகள்', 'இவரின் மனைவி', 'இவரின் அம்மா' என்றே அடையாளப்படுத்தப்பட்டு விட்டனர். இதை மாற்ற 'இவர்கள்' என்று அடையாளப்படுத்தப்பட பெண்கள் கட்டாயம் பணிகளுக்கு வர வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அடையாளம் என்பது மிக மிக முக்கியமே. இவ்வளவு ஏன்... அடையாளம் என்பது வருங்காலத்தில் தனி மனித உரிமையாகக் கூட மாறலாம்.

'தனிப்பட்ட நலன்' என்பதைத் தாண்டி, குடும்பம் மற்றும் சமுதாய நலனிலும் பெண்களின் பணி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஒருபக்கம் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அதற்கேற்ற மாதிரி பணவீக்கமும் எகிறிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சமாளிக்க ஒரு குடும்பத்திற்கு இரட்டை வருமானம் தேவை. அந்த இரட்டை வருமானத்தில் ஒன்று பெண்களின் வருமானமாக இருக்க வேண்டும். அதை ஆப்ஷனல் வருமானமாக கருதாமல், அத்தியாவசிய வருமானமாக கருத வேண்டும்.

ஆண்களே, தோள் கொடுக்க தயார்!

குடும்பத்தின் பாரத்தை ஆண்கள் மட்டுமே சுமக்கிறார்கள் என்ற கூற்று எல்லாம் இனி வேண்டவே வேண்டாம். பெண்கள் தோள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதை ஏற்றுகொள்ளத்தான் இந்த சமுதாயம் மனம் படைக்க வேண்டும்.

ஆண்கள் வேலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்... சமுதாயம் உதவ வேண்டும் என்று பெண்கள் எண்ணாமல் 'நம் வாழ்க்கை நம் கையில்' என்பதை புரிந்துகொண்டு நமக்காக நாம் ஓடத் தொடங்க வேண்டும்... பேச தொடங்க வேண்டும்.

ஏற்கெனவே வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் பெண்கள்... இன்னும் தங்கள் ஓட்டத்தை வேகப்படுத்த வேண்டும். ஒரு வருடம், ஒரு மாதம் என்பதெல்லாம் இல்லாமல் நொடிக்கு நொடி தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. குடும்பம் எவ்வளவு முக்கியமோ, இந்தப் போட்டி உலகில் கரியரும் மிக மிக முக்கியம். தொழில்நுட்பங்களுக்கு அப்டேட் ஆக அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆண்களே, தோள் கொடுக்க தயார்!

செல்போனும், இன்டர்நெட்டும்!

பெண்கள் வேலைக்குச் செல்லும் குடும்பமோ, செல்ல விரும்பும் குடும்பமோ... பெண்களின் வேலை உங்கள் 'எக்ஸ்ட்ரா' வருமானம் அல்ல... அவர்களுக்கான உரிமை. குடும்பமோ, குழந்தையோ பெண்களுக்கு மட்டுமல்ல; அதில் இருக்கும் ஆண்களுக்கும் தான் சொந்தம். அதனால், அந்தப் பங்கை சரிசமமாக எடுத்துகொள்ள வேண்டும். இதை ஏதோ ஆஃபர் அல்ல... கம்பல்சரி. இது பல ஆண்டுகளாக... பல காலங்களாக பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை ஆகும்.

இன்றும் இந்த சமுதாயம் பெண்கள் வேலைக்குச் செல்வது, நைட் ஷிஃப்ட் செல்வது, ரிஸ்க் ஆன வேலைகளுக்குச் செல்வதை 'ரெட் ஃபிளாக்' ஆகவே பார்க்கிறது. அந்த சமுதாயத்தைப் பார்த்து நாம் பயப்படுகிறோம். தேவையில்லை... சமுதாயம் என்பது நாமும், நம் குடும்பமும் தான். நம்மில் மாற்றம் தொடங்கும்போது, இந்தச் சமுதாயமும் மாற்றம் பெறும்... பெண்கள் மேலும் பளீச்சிடுவார்கள்!

இனிய மகளிர் தின வாழ்த்துகள்:)

60's கிட்ஸின் அக்கால ஆரம்பப் பள்ளியும், சங்கமும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Sunita Williams: விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்று கிட்டதிட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர பல ஏற்பாடுகள் செய்யப்பட்டும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தற்போது எலான் மஸ்க்கின் ஸ... மேலும் பார்க்க

``ரூ.130 கோடி சொத்து இருக்கு... ஆனா, சும்மா இருக்க கூடாது'' - ஊபரில் கார் ஓட்டும் கோடீஸ்வரன்

'டீல்ஸ் தமாக்கா' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் வினீத் அமெரிக்காவில் தான் சந்தித்த ஊபர் கார் டிரைவரை பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து வினீத், "இன்று ... மேலும் பார்க்க

'கண் அசைவும், பேச்சும் மட்டும்தான்' - தசை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை!

“காடு இருந்தா எடுத்துக்குவானுங்க. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க. படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” - இது இந்தக் கால அசுரன் திரைப்படம். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும... மேலும் பார்க்க

'விவசாயத்துல அவ்வளவு லாபம் இல்லை; ஆனா கடையில...' - பகுதி நேர விவசாயி; முழு நேர வியாபாரியின் கதை!

திருநெல்வேலி நீதிமன்ற சாலையை கடக்கும் எவரும் இந்தத் தள்ளுவண்டி கடையை காணாமல் கடந்திருக்க வாய்ப்பே இல்லை. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் எதிரிலுள்ள பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் தள்ளுவண்டி கடை ... மேலும் பார்க்க