Tirupati: "ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு..." - திருப்பதி தேவஸ...
iPhone Air: ஆப்பிளின் மெல்லிய ஐபோன் வெர்ஷன்; வடிவமைத்த அபிதுர் சவுத்ரி பற்றி தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப திருவிழாவான ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
iPhone Air
வழக்கமான ஏர்பட்ஸ், ஆப்பிள் வாட்ச் அப்டேட்டுகளுடன் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோனில் மினி, எஸ்.ஈ, ஈ, ப்ளஸ், புரோ, புரோமேக்ஸ் என பல வெரைட்டிகள் வந்திருக்கின்றன.
முதன்முறையாக ஐபோன் ஏர் வெளியாகியிருக்கிறது. இதுவரையில் வந்திருக்கும் ஐபோன்களிலேயே இது மிகவும் மெல்லியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் தடினம் 5.6 மி.மி மட்டுமே. இதன் வெளிப்புறம் டைட்டானியத்தால் ஆனது. 256 ஜிபி மாடல் இந்தியாவில் 1,19,000 ரூபாய்க்கு விற்பனையாகவிருக்கிறது.
ஐபோன் ஏரின் தடிமன் சாதாரண ஐபோன்களைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும். மெல்லியதாகவும் சிறியதாகவும் இருந்தாலும் இதன் திறன் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. சிறிய பேட்டரியே ஒரு நாள் முழுவதும் போதுமானதாக இருக்கும் வகையில் மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஸ்டைலிஷான வடிவமைப்புக்கு பின்னால் இருப்பவர் அபிதுர் சவுத்ரி. இதனை வடிவமைக்க ஆப்பிள் இவரை அணுகியபோது, "உங்கள் கையில் எதிர்காலத்தின் ஒரு துண்டு இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் ஐபோனை உருவாக்க வேண்டும்" எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

அபிதுர் சவுத்ரி
அபிதுர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிறந்தவர். இவரது குடும்பம் வங்காள தேசம் பாரம்பரியத்தைக் கொண்டது எனக் குறிப்பிடப்படுகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளரான (Product designer) இவர், ஆப்பிள் தயாரிப்புகளை வடிவமைப்பதுடன் ஃப்ரீலான்சராகவும் பணிபுரிகிறார்.
Abidur Chowdhury Design என்ற சொந்த நிறுவனம் மூலம் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசகராக இணைந்து பணியாற்றுகிறார்.
இங்கிலாந்தில் உள்ள லபோரோ பல்கலைக்கழகத்தில் (Loughborough University) இளநிலை தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் பட்டம் பெற்றார். படிக்கும்போதே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டு முதல் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றும் இவர், தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார்.