செய்திகள் :

Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு காரணம் என்ன?

post image

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹாமஸ் - காஸா போர் தொடங்கி இப்போது நடந்து வரும் இஸ்ரேல் - ஈரான் போர் வரை இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கா இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

அமெரிக்காவின் ஒத்துழைப்பில் தான் இந்தப் போர்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நெதன்யாகு

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஈரானுடனான மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ``இஸ்ரேல் அரசின் சிறந்த நண்பர் அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. எங்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், இஸ்ரேலின் வான்வெளியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆதரவிற்கும் அவருக்கு நன்றி. இஸ்ரேலிய இராணுவம் எங்கள் இலக்குகளை நோக்கி படிப்படியாக நகர்கிறது" எனக் குறிப்பிட்டார்.

``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு மாதிரி அரங்கை பார்வையிட்டு தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்த... மேலும் பார்க்க

``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ... மேலும் பார்க்க

Israel: ``ஈரான் போரால்தான் அவரால் ஆட்சியில் நீடிக்க முடியும்" - நெதன்யாகுவை சாடிய பில் கிளிண்டன்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா.. என்ன நடக்கிறது?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அறிக்கை

பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?

Doctor Vikatan: நான்சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான்சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து ச... மேலும் பார்க்க