செய்திகள் :

Israel: ``ஈரான் போரால்தான் அவரால் ஆட்சியில் நீடிக்க முடியும்" - நெதன்யாகுவை சாடிய பில் கிளிண்டன்

post image

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசிய பில் கிளிண்டன், ``நெதன்யாகு நீண்ட காலமாக ஈரானுடன் போரிட விரும்பினார். அப்போதுதான் அவரால் என்றென்றும் பதவியில் நீடிக்க முடியும். அப்படித்தான், கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அதற்காக நாம் இந்தப் போரை விட்டுவிட முடியாது. இந்தப் போரை தணிக்க முயற்சிக்க வேண்டும். அதிபர் ட்ரம்ப் அதைச் செய்வார் என்று நம்புகிறேன்.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

பாலஸ்தீனம் போரில் அமைதி பேச்சுவார்த்தை பற்றி பேசவில்லை... பிரதமர் நெதன்யாகுவின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு அரசை வழங்கும் எண்ணம், இஸ்ரேலியர்களிடமும் இல்லை. இப்போது பிளவுபட்டு ஒழுங்கமைக்க முடியாத அளவுக்கு நசுக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நலனுக்காக நம் கூட்டாளிகளை அரவணைப்பதில் தவறில்லை. ஆனால், அறிவிக்கப்படாத போரின் போது மக்கள் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அதற்கு ஆதரவளிப்பது எப்படி சரியான முடிவாக இருக்க முடியும். இது போரை நிறுத்த நல்ல தீர்வாகாது.

ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக அப்பாவி உயிர்களை விலையாக கேட்க முடியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத பொதுமக்களை நாம் தொடர்ந்து கொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாழ ஒரு வாய்ப்பை விரும்புகிறார்கள்" என்றார்.

``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு மாதிரி அரங்கை பார்வையிட்டு தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு காரணம் என்ன?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ... மேலும் பார்க்க

Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா.. என்ன நடக்கிறது?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அறிக்கை

பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பருப்பு உணவுகளைச் சாப்பிட்டாலே வாயுத்தொல்லை.. புரதச்சத்துக்கு என்னதான் வழி?

Doctor Vikatan: நான்சைவ உணவுப்பழக்கம் உள்ளவன். முட்டைகூட சாப்பிட மாட்டேன். புரதச்சத்துக்கு பருப்பு வகைகளை மட்டும்தான்சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக எந்தப் பருப்பு சேர்த்து ச... மேலும் பார்க்க