செய்திகள் :

`J&K பிரிவு 370-ஐ நீக்க உதவியவர்' புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார்.. யார்?

post image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் ஆகிய இருவரில் ஞானேஷ் குமார் (61) புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை மோடி அரசு மாற்றியது.

ஞானேஷ் குமார்

இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மாற்றப்பட்ட நடைமுறையின்படி தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கப் பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய கமிட்டி நேற்று கூடியது.

அரசிதழ்

இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், 1 : 2 என்ற அடிப்படையில் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. நாளை ஞானேஷ் குமார் பதவியேற்பார்.

யார் இந்த ஞானேஷ் குமார்?

1964-ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவரான ஞானேஷ் குமார், கான்பூர் ஐ.ஐ.டி-யில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் இன்ஸ்டிடியூஷனில் (ICFAI) Business Finance படித்திருக்கும் இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரமும் (Environmental Economics) படித்துள்ளார். பின்னர், 1988-ம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய ஞானேஷ் குமார், 2007 முதல் 2012 வரை யு.பி.ஏ அரசாங்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

ஞானேஷ் குமார்

அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் 2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்குவதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக முக்கிய பங்காற்றினார்.

அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஞானேஷ் குமார், அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்று, அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அடுத்த 11 மாதங்களில் தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அமித் ஷா - ஞானேஷ் குமார்

இவரின் பதவிக்காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்கள்!

2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்.

2026 தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல்.

2027 குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்.

தேர்தல்

2029 மக்களைவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்.

2029 ஜனவரி 26 வரை இவர் பதவியில் இருப்பார் என்பதால், மொத்தம் 20 சட்டமன்றத் தேர்தல்கள் இவரின் தலைமையில் நடைபெறக்கூடும்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை'' - பா.ஜ.க அரசு முடிவு!

நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில... மேலும் பார்க்க

விகடன் இணையதளம் முடக்கம்: ``பாசிச ஊடுருவலின் அடையாளம்" -ஷாஜி என்.கருண் கண்டனம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதிய... மேலும் பார்க்க

``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தம... மேலும் பார்க்க

``Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்.." - ட்ரம்ப் கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency - DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஃபாக்ஸ் நி... மேலும் பார்க்க

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ... மேலும் பார்க்க

நாமக்கல்: குடியிருப்பு பகுதியில் நடைபாதையை அடைத்த இன்ஜினியர் -நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

நாமக்கல் மாநகராட்சி 19 -வது வார்டில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்று 33 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள் குடியிருப்பில் இருந்து நரசிம... மேலும் பார்க்க