செய்திகள் :

Jana Nayagan: "இதுதான் உங்க கடைசி படமா?" - மமிதா பைஜுவின் கேள்விக்கு விஜய்யின் பதில் என்ன?

post image

விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

அ. வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகை மமிதா பைஜுவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். அவருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, "விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்" எனக் கூறியிருந்தார்.

தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்வில் அவர், "நான் விஜய் சாரிடம், 'இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' எனக் கேட்டேன்.

Mamitha Baiju About Vijay
Mamitha Baiju About Vijay

அதற்கு அவர், 'தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அது தெரியும்' என்றார். கடைசிக் கட்டப் படப்பிடிப்புகளில் நாங்கள் அனைவரும் எமோஷனலாகிவிட்டோம்.

விஜய் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும், அவருடன் புகைப்படம் எடுக்கும்போது நானும், சுற்றி இருந்த அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். அப்போது விஜய் சாரும் எமோஷனலாகிவிட்டார்" எனக் கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Nelson: "டாக்டர் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம்; ஏன்னா..." - யோகி பாபு

நெல்சன் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார்.அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்... மேலும் பார்க்க

சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

'பாட்ஷா', 'அண்ணாமலை', 'ஆளவந்தான்' உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்போது அவர் இயக்கியிருக்கும் 'சாருகேசி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வரு... மேலும் பார்க்க

"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யும் பூஜா ஹெக்டேவும் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.விஜய்யின் 51-வது பிறந்தநாளை மு... மேலும் பார்க்க

Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" - மமிதா பைஜூ ஷேரிங்

விஜய்-க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தில் தங்களுடைய காட்சிகளை விஜய்யும... மேலும் பார்க்க

Kuberaa: "எனக்காக கமல் சாரும், சிரஞ்சீவி சாரும் பண்ணின விஷயம் அது" - தேவி ஶ்ரீ பிரசாத் ஷேரிங்க்ஸ்!

தனுஷ் நடிப்பில் வெளியாகிய 'குபேரா' திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ... மேலும் பார்க்க