செய்திகள் :

Nelson: "டாக்டர் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம்; ஏன்னா..." - யோகி பாபு

post image

நெல்சன் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார்.

அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்திருந்தது.

Nelson | நெல்சன்
Nelson | நெல்சன்

சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், அதற்கான ப்ரோமோவில் நெல்சனும் இடம்பெறுகிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டு, இணையத்தில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களும் கசிந்தன.

அந்தப் புகைப்படம் வெளியான பிறகு பலருக்கும் நெல்சன் நடிக்க வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் விகடன் பிரஸ் மீட்டில், யோகி பாபு, நெல்சன் நடிப்பின் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். விகடன் பிரஸ் மீட்டில் அவர், "நான் நெல்சனை நடிக்கச் சொல்லி கேட்டுட்டு இருக்கேன்.

ஆனா, அவர் நடிக்க மாட்டேங்குறார். இப்போகூட நான் அவர்கிட்ட 'நெல்சன், நீ நடிக்க வா'ன்னு சொன்னேன். அவர் 'வேண்டாம்'னு சொல்லிட்டார். நெல்சன் நடிக்க வந்தா நல்லா இருக்கும். அவர் செம்ம சென்ஸிபிளான நபர்.

Yogi Babu About Nelson
Yogi Babu About Nelson

யாருக்கு என்ன தெரியும், அடுத்து அவரே கதை எழுதி, அவரே நடிக்கலாம். 'டாக்டர்' படத்துல வர்ற ரெட்டின் கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம். ஏன்னா, அந்தப் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்தோட தன்மை நெல்சன் கிட்ட இருக்கும் (சிரிக்கிறார்).

இந்த விஷயத்தை நான் நெல்சன் கிட்டயே சொல்லியிருக்கேன். எல்லோரும் இந்த விஷயத்தைச் சொல்லி சிரிச்சிருக்கோம்," எனக் கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Jana Nayagan: "இதுதான் உங்க கடைசி படமா?" - மமிதா பைஜுவின் கேள்விக்கு விஜய்யின் பதில் என்ன?

விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. Jana Nayagan - Vijay அ. வினோத் இயக்கும் இப்படத... மேலும் பார்க்க

சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

'பாட்ஷா', 'அண்ணாமலை', 'ஆளவந்தான்' உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்போது அவர் இயக்கியிருக்கும் 'சாருகேசி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வரு... மேலும் பார்க்க

"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. விஜய்யும் பூஜா ஹெக்டேவும் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.விஜய்யின் 51-வது பிறந்தநாளை மு... மேலும் பார்க்க

Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" - மமிதா பைஜூ ஷேரிங்

விஜய்-க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தில் தங்களுடைய காட்சிகளை விஜய்யும... மேலும் பார்க்க

Kuberaa: "எனக்காக கமல் சாரும், சிரஞ்சீவி சாரும் பண்ணின விஷயம் அது" - தேவி ஶ்ரீ பிரசாத் ஷேரிங்க்ஸ்!

தனுஷ் நடிப்பில் வெளியாகிய 'குபேரா' திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ... மேலும் பார்க்க