செய்திகள் :

kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

post image

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப்பா, அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனக்காகத்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

கமலினி
கமலினி

அதுவே பெரிய விஷயம். ஐபிஎலில் மும்பை அணியில் நான் தேர்வானதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை மாறியது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. திறமையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி பெற முடியும். பெண் பிள்ளைகளை நம்பி விளையாட விடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்தான் கமலினி. U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் பலரையும் ஈர்த்தது.

கமலினி
கமலினி

அது மட்டுமின்றி நடந்து முடிந்த பெண்கள் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இவரை கடும் போட்டிக்கு இடையில் 1.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"நீங்கள் இதைக் கேட்டிருக்கவே கூடாது" - பாகிஸ்தானுடனான போட்டி தொடர்பாக நிருபரிடம் தவான் கோபம்

முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைப... மேலும் பார்க்க

Joe Root: சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பது சாத்தியமா? எண்களை வைத்து ஓர் அலசல்!

டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் ஜோ ரூட். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக ஆடி சாதனைகள் மேல் சா... மேலும் பார்க்க

AUS vs WI: "இது என் சிறுவயது கனவு" - 37 பந்துகளில் சதமடித்த பிறகு டிம் டேவிட் பேசியது என்ன?

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. இதில் உலக சாதனை படைத்துள்ள டிம் டேவிட், தான் சாதனைகளுக்காக விளையாடவி... மேலும் பார்க்க

``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்சினின் பாராட்டும்

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது (ஜுலை 23 முதல்).இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கிறிஸ்... மேலும் பார்க்க

Pant: `காயத்துடன் களமிறங்கும் ரிஷப் பண்ட்; ஆனால் கீப்பிங் மட்டும்..." - BCCI கொடுத்த அப்டேட்

இங்கிலாந்து இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய (ஜூலை 23) தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. போட்டியின்போது பேட்டிங் விளையாடிய இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு காலில்... மேலும் பார்க்க

ENG vs IND: நிரூபித்த சாய் சுதர்சன்; அசத்திய ஸ்டோக்ஸ்; மீண்டும் காயமடைந்த பண்ட் | 4th test Day 1

இங்கிலாந்துக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கான கடைசி வாய்ப்பாகவும், 2 -1 என பின்தங்கியிருக்கும் தற்போதைய நிலையை சமன்படுத்தவும் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று (ஜூலை 23) களம... மேலும் பார்க்க