செய்திகள் :

Kerala: காசர்கோடு கோயில் விழாவில் பட்டாசு விபத்து; 154 பேர் காயம்; ஆபத்தான நிலையில் 8 பேர்

post image

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தில் தேரு அஞ்சோடம்பலம் வீரேர்காவு கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று (அக்டோபர் 29) அதிகாலை 12.20 மணியளவில் களியாட்டம் விழா நடைபெற்றது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சியின் போது வெளிவரும் தீப்பொறிகள் வெடித்துச் சிதறி திடீரென தீப்பிடித்தது.

பட்டாசு விபத்தால் சேதமடைந்த பகுதி

இதில், பெண்கள் குழந்தைகள் உள்பட 154க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், படுகாயமடைந்த 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் முதலில் காசர்கோடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மங்களூரு மற்றும் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயில் விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், "வாண வேடிக்கையிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. தீ பெரிய தீப்பந்தமாக எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகிலிருந்தவர்களின் முகம், கைகள் மற்றும் ஆடைகளில் தீக்காயம் ஏற்பட்டது. பொது மக்களும், தீயணைப்பு வீரர்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்றனர்.

காசர்கோடு கோயிலில் வெடி விபத்து

மேலும், வான வேடிக்கை பட்டாசின் தீப்பொறியானது பட்டாசு குவியலில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காசர்கோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இன்பசேகர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் கண்காணிப்பில் தீயணைப்புப் படையினர் மற்றும் சமூக தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். பட்டாசு விபத்தில் காயம் அடைந்த ஒவ்வொருவரின் நிலையையும் கண்காணித்து வருவதாகக் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

உ.பி: மருத்துவமனையில் இரவில் தீ விபத்து; 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் இருக்கும் மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனை முழு... மேலும் பார்க்க

தேனி: `தங்கச்சி வீட்டு விசேஷத்துக்கு வர்றேன்னு போனார்'- பணியில் உயிரிழந்த ராணுவ வீரர்; மக்கள் சோகம்!

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியரின் மகன் முத்து (36). இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் 12 RAPID SIG ரெஜிமென்ட்டில் சிப்... மேலும் பார்க்க

குஜராத்: புல்லட் ரயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கான்கிரீட் பிளாக் சரிந்து விபத்து; மூவர் பலி!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. மகாராஷ... மேலும் பார்க்க

Uttarakhand Bus Accident: 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பேருந்து; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.45 இருக்கைகளைக் கொண்ட பேருந்து, மர்ச்சுலா பகுதியில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்க... மேலும் பார்க்க

திருவாரூர்: பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இளைஞர் பலி; காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட மேல வடம் போக்கி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் உந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கழிவு நீர் தனியார் வண்டி மூலம் கழிவு நீர் பாதா... மேலும் பார்க்க

TVK : தவெக மாநில மாநாடு: காரில் சென்ற திருச்சி இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி!

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி, நேரடி அரசியலில் குதிக்க முடிவு செய்தார். இந்நிலையில், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை பக... மேலும் பார்க்க