செய்திகள் :

Kerala: `வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்' -எம்.எல்.ஏ கைது; போலீஸை விமர்சித்த கோர்ட்.. என்ன நடந்தது?

post image

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத எம்.எல்.ஏ

கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் ஆதரவுடன் வெற்றிபெற்று மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். இவர் காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் சி.பி.எம் கூட்டணி தலைமையிலான பினராயி விஜயனின் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்த பி.வி.அன்வர் எம்.எல்.ஏ கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தனது தொகுதியான நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு  பகுதிகளில் அதிக மக்களை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட பி.வி.அன்வர் எம்.எல்.ஏ

அவருக்கு மக்கள் அதிக ஆதரவு இருப்பதாக கூறி  மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி டி.எம்.கே என்ற இயக்கத்தைத் தொடங்கினார். டொமாக்ரட்டிக் மூவ்மெண்ட் ஆஃப் கேரளா என்பதன் சுருக்கமே டி.எம்.கே ஆகும். டி.எம்.கே கட்சி மூலம் மக்கள் பிரச்னைகளை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் பி.வி.அன்வர் எம்.எல்.ஏ.

வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

இந்த நிலையில், கருளாயி பகுதியில் காட்டு யானை மிதித்ததில் மணி என்ற பழங்குடியின இளைஞர் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.வி.அன்வர் எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 40 பேர் நிலம்பூர் வனத்துறை அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில் போலீஸுடன் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நிலம்பூர் வன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக எம்.எல்.ஏ பி.வி அன்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பி.வி.அன்வர் எம்.எல்.ஏ

இதற்கிடையே பி.வி.அன்வர் எம்.எல்.ஏ-வை கஸ்டடியில் விசாரணை நடத்த போலீஸார் இன்று கோர்ட்டில் அனுமதி கேட்டனர். ஆனால், அந்த வழக்கில் 11 பேர் உள்ள நிலையில் எம்.எல்.ஏ பி.வி.அன்வரை மட்டுமா உங்களால் அடையாளம் காண முடிந்தது என போலீஸை விமர்சித்த கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து  டி.எம்.கே கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பி.வி.அன்வர் எம்.எல்.ஏ-வின் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், "நிலம்பூரில் வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பி.வி.அன்வரின் தூண்டுதலே காரணம். அன்வர் தலைமையிலான கூட்டத்தினர் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் அதிகாரிகளை தள்ளிவிட்டதில் அவர்கள் தரையில் விழுந்து காயம் ஏற்பட்டது. வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் 35,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமானது" என்று ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்த எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட அன்றே கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரள அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா...?

Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் உடலில் நல்ல கொழுப்பின்அளவு அதிகரிக்குமா... பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட வேண்டுமா, தோல் நீக்கி சாப்பிடுவது சரியா? இதய நலனைப் பாதுகாக்க எண்ணெய் பயன்பாட்டை அறவே தவிர்... மேலும் பார்க்க

Food & Health: காய்ச்சல் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மருந்துகள் கொடுப்பதால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. ‘காய்ச்சல் குணமாவதற்குத்தான் மருந்து சாப்பிட்டுவிட்டோ... மேலும் பார்க்க

TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பும் சர்க்கரையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?

Doctor Vikatan:சர்க்கரையையும் உப்பையும் அறவே தவிர்த்த உணவுகள் ஆரோக்கியமானவையா? இவை இரண்டும் உடலுக்குத் தேவையில்லையா? சர்க்கரையோ, உப்போ இல்லாத உணவுகளை உண்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் சொல்கி... மேலும் பார்க்க

Canada: ``கனடாவின் அடுத்தப் பிரதமர்?" - ரேஸில் முன்னணியில் இருக்கும் அனிதா ஆனந்த! - யார் இவர்?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தப்... மேலும் பார்க்க