செய்திகள் :

Lockup Death: 'தைரியமாக இருங்க; நாங்க இருக்கோம்'- அஜித்குமாரின் அம்மாவிற்கு ஆறுதல் சொன்ன எடப்பாடி

post image

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள்  குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்குமாரின் அம்மாவை எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

அஜித்குமார்
அஜித்குமார்

"துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாகத் தாக்கியதால் உங்களுடைய மகன் அஜித்குமார் மரணம் அடைந்துவிட்டார்.

தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். இது மீள முடியாத ஒரு துயரம்.

தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. பெற்ற தாயிற்குதான் அந்த வலி தெரியும்.

அதனால் நீங்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது. நீதிமன்றத்திலும் அதிமுக சார்பாக வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நீதி நிலைநாட்டப்படும். மனம் தளராமல் இருங்கள். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி  போனில் ஆறுதல் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுச... மேலும் பார்க்க

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க

பாமக: "அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு; என் மனது வேதனைப்படும் அளவுக்கு..." - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் ... மேலும் பார்க்க

"டார்ச்சர் செய்றாங்க... என் சாவுக்கு திமுக-வினர் காரணம்" - ஆடியோ வெளியிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார்.திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

மிஸ்டர் கழுகு: சீனியரை மாற்ற விரும்பாத தலைமை.. டு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அண்ணன்!

ஆட்டம் காட்டும் மேலிட உறவுப்புள்ளி!சீனியரை மாற்ற விரும்பாத தலைமை...சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சீனியரை மாற்றும் எண்ணத்தில் முதன்மையானவர் இல்லையாம். ஆனாலும், ‘அவர் மாற்றப்பட உள்ளார... மேலும் பார்க்க