செய்திகள் :

Lumpsum: உங்க பேங்க் பேலன்ஸ் கூறும் பொய்... லம்ப்சம் முதலீடு பற்றித் தெரியாத அந்த விஷயம்...

post image

நீங்க 10, 15, 25 வருஷம் உழைச்சாச்சு. பார்த்து பார்த்து பேங்குல சில லட்சங்கள் பணமும் சேர்த்தாச்சு. ரொம்ப நிம்மதியா இருக்குல்ல? நாம நினைக்குற நேரத்துல நம்மளைக் காப்பாத்தக்கூடிய பணத்தை சேர்த்துட்டதா நினைக்கிறீங்க இல்லையா? ஆனா இது உண்மையா உண்மைதானா?

இந்திய நடுத்தர குடும்பங்கள் அவங்களுக்கு அவங்களே சொல்லிக்கொள்ளும் மிகப்பெரிய பொய்: 'என் பணம் பேங்க்ல பத்திரமா இருக்கு! FD-ல போட்டா என் பணம் எனக்கு கேரண்டியா கெடச்சிரும்...'

Mutual fund - முதலீடு - மியூச்சுவல் ஃபண்ட்

ஆனா இதுதான் உண்மை நிலவரம்

உங்க பணம் வங்கியில் பாதுகாப்பா இல்ல. இதுதான் பச்சை உண்மை. அது விலைவாசி உயர்வைத் தாண்டி வளராம ஒரே இடத்துல தூங்கிகிட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் அதன் மதிப்பு குறைஞ்சிட்டே போகுது. கொஞ்சம் இதை மனசுல ஆழமா பதிய வச்சுக்கோங்க...

சரி பணம் இருக்கு. அதை நல்ல நேரமா, நல்ல இடமா பார்த்து முதலீடு செய்யலாம்னு ஒவ்வொரு நாளும் நீங்க தள்ளிப்போட போட, பணவீக்கம் உங்க பணத்தை அரிச்சு சாப்பிட்டுட்டு வருது. ஆனா நமக்கிது தெரியும்போது காலம் கடந்துருது.

உங்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன தெரியுமா?

இந்தியாவின் சராசரி விலைவாசி உயர்வு 6-7%. வங்கி வைப்பு நிதி (FD)-க்கு கிடைக்கும் வட்டி 7.30 - 8.5%. அப்போ உங்களுக்கு கிடைக்கும் உண்மையான லாபம் வெறும் 1% தான். இந்த 1% சதவீதம் பணத்துக்கா நீங்க இவ்ளோகஷ்டப்பட்டீங்க? இதுவே சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் வட்டி 3-4% தான். ரொம்ப வருடங்களா உங்க பெரும்பணம் சேமிப்பு கணக்கிலேயே இருந்தா, கூடுதலா 2% பணம் உங்க கைலேர்ந்து போட்டு நீங்க வங்கியை வளர்த்து விடுறீங்கன்னு அர்த்தம்! (சிறந்த சமூக சேவகர் விருது உங்களுக்குத்தான் கொடுக்கணும்!)


உங்க பணத்தை நிர்வகிக்கும் திட்டம், அதை வெறும் வங்கியில் மொத்தமாக போட்டு வைப்பதுதான்னா, நீங்க எப்படி சீக்கிரமா ரிட்டையர் ஆவுறது? எப்படி குழந்தைகளை கரை சேர்ப்பது? நீங்க விரும்பிய வாழ்க்கையை எப்படித்தான் வாழுறது?

முதலீடு - மியூச்சுவல் ஃபண்ட்

இதுக்கு ஒரே வழி...

உங்க கையில் இருக்கும் மொத்த பணத்தை ஒரு பக்கம் வளரச் செய்து, அதை ஒரு வருமானமும் ஈட்ட வைச்சா நல்லா இருக்கும்ல? அந்தக்காலத்துல மொத்த பணம் இருந்தா வட்டிக்கு விடுவாங்க, ஆனா இப்போ ஸ்மார்ட்டா முதலீடு செய்யும் குடும்பங்களும் முதலீட்டாளர்களும் என்ன செய்றாங்க தெரியுமா? சரியான மியூச்சுவல் ஃபண்ட்ஸில் லம்ப்சம் முதலீடு செய்றாங்க. இதனால நிம்மதியான வளர்ச்சி, வரி சேமிப்பு மற்றும் வருவாய் ஈட்டல் கிடைக்குது.

கேக்க நல்லா இருக்குல்ல? சரி வங்கியில் தூங்கிட்டு இருக்குற உங்க பணத்தை தட்டி எழுப்பி வேலை வாங்கணுமா? லம்ப்சம் முதலீட்டை எப்படி செய்யணும்னு தெரியணுமா? மறக்காம விகடன் லாபம் நடத்தும் சண்டே வெபினாரில் கலந்துக்கோங்க...

தலைப்பு: லம்ப்சம் முதலீடு - செய்ய வேண்டியவை & கூடாதவைநாள்: ஜூன் 29, 2025, ஞாயிறுநேரம்: காலை 11:00 மணி - 12:30 மணிபேச்சாளர்: பகவதி சுப்பிரமணியம், வைஸ் பிரசிடெண்ட் & ஜோனல் ஹெட், இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்

இந்த வெபினார் யாருக்கு?

* தூக்கத்திலும் அவங்க பணத்தை வைச்சு வருவாய் ஈட்டுவது எப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு

* SWP மூலம் மாதமொரு வருமானத்தை உருவாக்க நினைக்கிறவங்களுக்கு

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் இதை எப்படி செய்யலாம்னு நினைக்கிறவங்களுக்கு

* கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் விலைவாசி உயர்வால கரைஞ்சி போகக்கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு

SIP - எஸ்.ஐ.பி முதலீடு...



இந்த வெபினார் யாருக்கு கிடையாது?

* வங்கி சேமிப்பே போதும்னு நினைப்பவங்க

* சேர்த்த பணத்துக்கு 1% வளர்ச்சி போதும்னு நினைக்கிறவங்க

* முதலீட்டை எவ்ளோ நாள் வேணாலும் தள்ளிப் போடலாம்னு நினைக்கிறவங்க

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். முன்பதிவு செய்ய கடைசி நாள், சனி, ஜூன் 28, 2025 (பிற்பகல் 3 மணி).


நிகழ்ச்சியில் கலந்துக்க முடிவெடுத்துட்டீங்களா? கையோட ரெஜிஸ்டர் செய்ங்க: https://forms.gle/KSTZRP7Apqv8rnws7

"நான் அமன் சொத்து; என்னைத் தொட்டால் வெட்டுவேன்" - முதலிரவில் கத்தியைக் காட்டி கணவனை மிரட்டிய மனைவி

உத்தரப் பிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் காதலன் துணையோடு கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்மில் சிமெண்ட் போட்டு வைத்தார்.சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி தேனிலவுக்... மேலும் பார்க்க

`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜேந்திர காவிட். பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராஜேந்திர காவிட் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு இரண்டு மனைவி இருப்பதை குறி... மேலும் பார்க்க

இத்தாலி: அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர் - எப்படி?

இத்தாலிய அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் 300 ஆண்டுகள் பழைமையான கலைப்படைப்பை சேதப்படுத்தியுள்ளார்.புளோரன்ஸின் புகழ்பெற்ற உஃபிஸி கேலரியில் உள்ள விலைமதிப்பற்ற 300 ஆண்டுகள் ப... மேலும் பார்க்க

Disneyland-ல் 9 வயது சிறுமியுடன் திருமண ஏற்பாடு; கைதான 22 வயது நபர்; என்ன நடந்தது?

பாரிஸின் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்கில் 9 வயதில் சிறுமியுடன் போலியான திருமணம் நடத்த முயன்றதாகப் பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை தீம் பார்க்கை திருமணத்திற்காக புக் செ... மேலும் பார்க்க

Cafe: ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய்; இருட்டான இருக்கை வசதி- போலீசார் சோதனையில் சிக்கிய கஃபேக்கள்!

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சில கஃபேக்கள், காதல் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வசூலித்து, இருட்டான இருக்கை வசதியை வழங்கியுள்ளது.அந்த பகுதியில் கஃபே நடத்துபவர்கள் காதல் ஜோடிகளுக்கு கூடுதல் ... மேலும் பார்க்க

விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டா"- சீன ஹோட்டலில் ஓர் இரவு தங்க இவ்வளவு கட்டணமா?!

சீனாவின் சோங்கிங் பெருநகரத்திற்கு அருகிலுள்ள சிலெஹே லெடு லியாங்ஜியாங் ஹாலிடே என்ற ஹோட்டல், விருந்தினர்களை எழுப்ப "சிவப்பு பாண்டாக்களை" பயன்படுத்தியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த ஹோட்டலில் தங்கு... மேலும் பார்க்க