செய்திகள் :

Maharashtra: போலீஸிடமிருந்து தப்பிக்க மணலைக் கொட்டிய லாரி ஓட்டுநர்; உயிரோடு புதைந்த தொழிலாளர்கள்

post image

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக குடிலில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட மணலைப் போட்டதில் 5 உயிரிழந்துள்ளனர்.

ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் பசோடி சிவார் என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் தொழிலாளர்கள் சிலர் சிறிய தற்காலிக குடில் அமைத்துத் தங்கி இருந்தனர். இரவில் அந்த குடிலில் தொழிலாளர்கள் உறங்கிக்கொள்வர். அதிகாலை 3 மணிக்கு அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்தனர். அந்த லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் விரட்டி வந்தனர். மேம்பால கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் லாரி ஓட்டுநர் அவசரமாக மண்ணை டிப்பர் லாரியில் இருந்து கொட்டினார். ஆனால் மணல் அருகிலிருந்த குடில் மீது விழுந்தது.

விபத்து நடந்த இடம்

இதனால் குடில் இடிந்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்தவர்களை மணல் மூடியது. உள்ளே தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் லாரி ஓட்டுநர் மணலைக் கொட்டிவிட்டார். மணல் கொட்டப்பட்ட பிறகுதான் உள்ளே தொழிலாளர்கள் உறங்குவது தெரிய வந்தது. உடனே ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். மணலில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டனர். மணலுக்குள் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து உயிரிழந்தனர்.

தப்பியோடிய ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவம் அதிகாலை 3 மணிக்கு நடந்தது. ஆனால் போலீஸார் 18 மணி நேரம் கழித்துத்தான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். மேம்பால ஒப்பந்ததாரர் செலவைக் குறைக்கச் சட்டவிரோத மணலை இரவு நேரங்களில் கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

தெலங்கானா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் - மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில், இன்று காலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க

மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்... பணி செய்யும் ஸ்டேஷனிலேயே உயிரிழந்த சோகம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேசகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ர... மேலும் பார்க்க

மூணாறு: சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து; நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவியர், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நாகர்கோவிலில் இருந்து கேரளா பதிவெண் கொண்... மேலும் பார்க்க

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்... 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள் பயணம் செய்தனர். விமானம் கன... மேலும் பார்க்க

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்க... மேலும் பார்க்க

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க