செய்திகள் :

Manmohan Singh: மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு... அரசு நிகழ்ச்சிகள் ரத்து!

post image
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் மறைவு இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Manmohan singh | மன்மோகன் சிங்

இந்நிலையில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால், இன்று (டிசம்பர் 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அத்துடன் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது. மன்மோகன் சிங் மறைவுக்கு இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: `ஜனவரி 12-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் ஏன்?’ – அமைச்சர் சொல்வதென்ன ?

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

'புதிய சர்கஸ் கம்பெனியால், பழைய சர்கஸ் கோமாளிகள் வேடம் அணிகிறார்கள்' - டி.ஆர்.பி ராஜா

திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி... மேலும் பார்க்க

Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசிய பிரதமர் இப்ராஹிம்

இந்திய வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இவரின் மறைவுக்கு உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன் சிங்கின் தன்மையான ஆளுமையும் அ... மேலும் பார்க்க

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?""நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ... மேலும் பார்க்க

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க