செய்திகள் :

MI vs LSG: "எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது..!" - வெற்றி குறித்து ஹர்திக் மகிழ்ச்சி

post image

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது.

மும்பை
மும்பை

வெற்றிக்குப் பின்னர் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, "எங்களுடைய இன்டென்ட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். எல்லோருக்கும் மேட்ச் க்ளிக் ஆகிறது. எங்களுக்கான இந்தச் சூழலை குழந்தைகள்தான் உருவாக்கினர் (ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் 19,000 சிறுவர், சிறுமிகள் இப்போட்டியைக் காண அழைத்துவரப்பட்டிருந்தனர்). அவர்களுக்காக நாங்கள் வென்றோம். எனவே மிகவும் மகிழ்ச்சி.

ஹர்திக்
ஹர்திக்

ஒவ்வொருவரும் தங்களின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். போஷ் உள்ளே வந்து அந்த சிக்ஸரை அடித்து விதம் அனைவரையும் ஈர்த்தது. போஷ் பந்துவீசவும் இன்று சிறந்த வாய்ப்பு. இதுவொரு கடினமான தொடர். நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், அடுத்த போட்டிக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். முன்னேறும் வேகத்தைத் தொடர வேண்டும்." என்று கூறினார்.

இந்தப் போட்டியில் மும்பை அணியில் அறிமுகமான கார்பின் போஷ், பேட்டிங்கில் 20 ரன்கள் அடித்ததோடு, பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Jasprit Bumrah: மலிங்காவின் சாதனையை முறியடித்த பும்ரா - பயிற்சியாளர் குறித்து பேசியதென்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா IPL 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீ... மேலும் பார்க்க

DC vs RCB: 'ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விராட் கோலி..!' - ஆட்டநாயகன் க்ருணால் பாண்டியா

ஐ.பி.எல் தொடரில் நேற்று(ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெ... மேலும் பார்க்க

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி?

வான்கடே மைதானத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் இன்று (ஏப்ரல் 27) மோதின. தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற லக்... மேலும் பார்க்க

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்த... மேலும் பார்க்க

MI vs LSG: ``பூரான், பண்ட் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்'' - ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவ... மேலும் பார்க்க

MI vs LSG: "எங்களுக்கான நாள் அல்ல; எதிரணி நன்றாக விளையாடியது" - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்... மேலும் பார்க்க