செய்திகள் :

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

post image

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10)  மாணவர்களுடன் மோடி கலந்துரையாடி இருக்கிறார். மாணவர்களுடன் பேசிய மோடி "தேர்வுகள் மட்டுமே எல்லாம் கிடையாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

பிரதமர் மோடி

மாணவர்கள் தங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். தங்களின் எல்லைகளை விரிவாக்கி, சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மனதைத் தயார் செய்ய வேண்டும். நமது சமூகத்தில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், வீட்டில் பதற்றமடையும் சூழல் உள்ளது.

உங்களுக்கு அழுத்தம் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதற்கு ஆளாகாமல், அதனைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்கள் ரோபோக்கள் அல்ல. நாம் முழுமையான வளர்ச்சிக்காகப் படிக்கிறோம். புத்தகங்களில் சிக்கிக் கொண்டால் மாணவர்கள் வளர முடியாது.

பிரதமர் மோடி

மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான செயலைச் செய்யும்போதுதான் அவர்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். தேர்வுதான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது. முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம்... மேலும் பார்க்க

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே ம... மேலும் பார்க்க

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அ... மேலும் பார்க்க

`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங... மேலும் பார்க்க

Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா

ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியற... மேலும் பார்க்க

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க