வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!
Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?
நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
அர்சு ராணா தியூபா தற்போதைய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டுவில் புதனில்கந்தா என்ற பகுதியில் உள்ள இவர்களின் வீட்டுக்குள் ஆர்பாட்டக்காரர்கள் அத்துமீறியுள்ளனர்.
Ex Priminister Sher Bahadur Deuba who was prime minister of Nepal for 5 time has been beaten by Nepalese public.#nepalprotest#politics#nepalpic.twitter.com/cV7ygpeEaL
— Manoj T (@amanoj1989) September 9, 2025
Ex Prime Minister of Nepal Sher Bahadur Deuba's house pic.twitter.com/ASOFnQ44jF
— The_bahunn (@The_bahunn) September 9, 2025
SHOCKING. In #Nepal, ex-PM Sher Bahadur Deuba left BLEEDING as his house was ransacked, ex-Peace Minister dragged like garbage, Street rule > Law
— The Analyzer (News Updates️) (@Indian_Analyzer) September 9, 2025
~ Don’t miss the subtext: this COLLAPSE is fuel for the same Regime-change cartels eyeing India nextpic.twitter.com/PSnLF2EQXf
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவில், தாக்குதல்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமரின் முகத்தில் ரத்தம் வருவது தெரிகிறது. அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக ராணுவம் அங்கு செல்வதற்கு முன்னர் அவர்கள் வீடு சூறையாடப்பட்டிருந்தது.
காத்மண்டுவிலும் நாட்டின் பிறப் பகுதிகளிலும் கலவரக்காரர்கள் நாசகர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் வீடுகள், அரசு அலுவலகங்கள், ஊடக, கட்சி அலுவலகங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் ஆகியவற்றை தீயிட்டு எரித்துள்ளனர்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களை முடக்கியது போராட்டம் வெடிக்க காரணமானது. "சமூக ஊடகங்களை அல்ல; ஊழலை நிறுத்துங்கள்" என்றும் கோஷமிட்டனர். போராட்டத்தை அடக்கும் நோக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது போராட்டம் கலவரமாக வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது.
வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தப்பித்து ஓடும் காட்சிகள் பரவி வந்தன. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். பல அரசியல் தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கின்றன.