Niti Aayog: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின் பங்கேற்பு; மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு..
டெல்லியில் இன்று( மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இந்த நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக பாஜக அரசு உருவாக்கிய அமைப்பு தான் நிதி ஆயோக். 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது.
தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs