செய்திகள் :

NTK: நாதக நிர்வாகிகளை வெளியேற்றிய சீமான்; 'சர்வாதிகாரமின்றி எதையும் சரி செய்ய முடியாது' என விளக்கம்!

post image
சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது என்று சீமான் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலியில் நேற்று (நவம்பர் 15) பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, கருத்து தெரிவிக்க முயன்ற அக்கட்சியின் சில நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேச முயன்ற நெல்லை மாவட்ட நிர்வாகிகள், கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.

நா.த.க கலந்தாய்வுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் மட்டுமே பேசினார். கடைசியாக நான் எழுந்து, மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைப் பேச முயன்றேன்.

சீமான்

என்னைப் பேச விடாமல், ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல், ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ எனத் திட்டினார். நான் வெளியே வந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த சீமான், "ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும்.

சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், அன்பான சர்வாதிகாரியாகத்தான் இருந்துள்ளார்கள். படிக்காத மாணவனுக்குப் பாடம் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, 'அப்பாடத்தை 10 முறை வீட்டுப்பாடமாக எழுதிட்டு வா' என்று ஒரு ஆசிரியர் சொல்வது அம்மாணவனின் பார்வையில் சர்வாதிகாரம். ஆனால், ஆசிரியர் பார்வையில் அது மாணவனின் நலனுக்கானது.

சீமான்

கட்சி விதிகளுக்குக் கட்டுப்படவில்லை என்றால் எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. இது வெகுதூரப் பயணம். நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு. சர்வாதிகாரம் இல்லாத இடத்துக்குப் போய்விடு. இது என் கட்சி பிரச்னை. நாட்டுப் பிரச்னையா? மக்கள் பிரச்னையா? இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?" எனக் காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

”பொய்க்கு மேக்கப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி; அது அம்பலமாகி விடும்”- சாடிய முதல்வர் ஸ்டாலின்!

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக நேற்று இரவே ஜெயங்கொண்டம் வந்த ஸ்டாலின் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதற்காக விருந்தினர் ம... மேலும் பார்க்க

Elon Musk: 'கடினமான வேலை; எதிரிகள் அதிகம்; ஆனால், சம்பளம் இல்லை' - எலான் மஸ்க்கின் புதிய வேலை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் 'அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள்' என்ற முன்னெடுப்பை எடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இதன் ஒரு பகுதியாக, தற்போது 'அரசு செயல்திறன் (Department of ... மேலும் பார்க்க

`அதானி வீட்டுக்குச் சென்றது உண்மைதான், ஆனால்...!' - அஜித் பவாரின் குற்றச்சாட்டு குறித்து சரத் பவார்!

கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் ‘X’ தில்லாலங்கடி... அதிபர் தேர்தலில் ஏற்படுத்திய தாக்கமும் விளைவும் என்ன?

அமெரிக்க தேர்தலும் எலான் மஸ்கும்!நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும், குறிப்பாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் கா... மேலும் பார்க்க

Mumbai: "தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி" - ராகுல் பேச்சின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்... மேலும் பார்க்க

US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்... தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் - யார் இந்த கென்னடி?!

சமீபத்தில் நடந்த அமெரிக்க தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்டிரம்ப் தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை அறிவித்து வருகிறார். அதன்படி, தற்போது ட்ரம்ப், சுகாதாரச் செயல... மேலும் பார்க்க