செய்திகள் :

Operation Sindoor : `ஜெய்ஷ்-இ-முகமது’ மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் பலி - பிபிசி தகவல்

post image

கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் படை 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதும் பாகிஸ்தானின் 4 இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் திவிரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுபனலா, தெஹ்ரா கலனில் சர்ஜால், கோட்லியில் மர்காஸ் அப்பாஸ், முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய தளங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.

முர்டிகேயில் மர்காஸ் தைபா, பர்னாலாவில் மர்காஸ் அஹ்லே ஹதீத், முசாஃபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகியவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.

கோட்லியில் மக்காஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் மெஹ்மூனா ஜோயா ஆகிய இடங்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளானவை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்பது இடங்களில் நான்கு பாகிஸ்தானிலும், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்தன. இந்த நிலையில், பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

மசூத் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் எனப் 10 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி உருது தகவ்ல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் பெரிய நகரமான பஹாவல்பூர், லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சுபானலா முகாம், உஸ்மான்-ஓ-அலி வளாகம் என்றும் அழைக்கப்படுகிறது.

India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

'அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க... மேலும் பார்க்க

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ - ஒமர் அப்துல்லா

'ஒமர் அப்துல்லா பதிவு!'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப... மேலும் பார்க்க

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க