செய்திகள் :

Palm Sunday: டெல்லியில் ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலத்திற்குத் தடை; பாஜக அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

post image

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையின்போதுதான் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடந்த 15 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் நகரத்தின் மையத்தில் அமைத்திருக்கும் செயின்ட் மேரிஸ் கத்தோலிக் சர்ச்சில் இருந்து சேக்ரட் ஹார்ட் தேவலாயம் வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு குருத்தோலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை விதித்திருந்தது டெல்லி காவல்துறை.

குருத்தோலை ஊர்வலம்

டெல்லியின் பிரதான சாலை வழியே இந்த ஊர்வலம் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை இதற்கு தடை விதித்திருக்கிறது.

ஆனால் அங்கிருக்கும் கத்தோலிக்க சங்கத்தினர், ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரை போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏதுமின்றியே அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் ஊர்வலத்திற்கு காவல்துறை தடைவிதித்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் விவாதப்பொருளாகி, குருத்தோலை ஊர்வலம் தடை என்பது சிறுபான்மை மத உரிமைகள் மற்றும் இந்தியச் சட்டத்திற்கு எதிரானது என்றும் சிறுபான்மையினர் மீதான பண்பாட்டுத் தாக்குதல் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (CPIM), "டில்லியில் குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை... ஏப்ரல் 4 வக்பு சட்டம். ஏப்ரல் 13 டெல்லி புனித இருதய கதீட்ரல் நோக்கிய குருத்தோலை ஊர்வலத்திற்கு தடை. 15 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த ஈஸ்டர் குருத்தோலை ஊர்வலம் இப்போது பாதுகாப்பு காரணங்களால் தடை. மோடி அரசு சிறுபான்மை மத உரிமைகள் மீது வாரம் ஒரு தாக்குதல்." என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் என்னும் பைபிளில் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள் நுழைந்தாராம்.

குருத்தோலை ஊர்வலம்

அப்போது, இயேசு ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இயேசுகிறிஸ்து மனித குலத்துக்குத் தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்..! #PalmSunday

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசரா

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகர... மேலும் பார்க்க

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க