செய்திகள் :

Pickle Juice: விளையாட்டு வீரர்கள் ஏன் ஊறுகாய் சாறு எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா?

post image

பொதுவாக விளையாட்டு வீரர்கள் ஊறுகாய் சாறு எடுத்துக் கொள்வார்கள். பல விளையாட்டு வீரர்களுக்கு ஊறுகாய் சாறு ஒரு முக்கிய உணவாகிவிட்டது.

எதற்காக இந்த ஊறுகாய் சாற்றை பருகுகிறார்கள்? இது அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது? என்பது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

தசைப்பிடிப்புகளை போக்க ஊறுகாய் சாறு விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாக உள்ளது.

இந்த திரவத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட எலக்ட்ரோலைட்டுகளின் மூலக்கூறுகள் உள்ளன. இது குடிநீரை விட 40 சதவீதம் வேகமாக தசை பிடிப்பை நீக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஊறுகாய் சாறு 'நரம்பியல் சமிக்ஞையை' சீர்குலைப்பதன் மூலம் செயல்படுவதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊறுகாய் சாற்றை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் முறை

ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி பேராசிரியரான மயூர் ராஞ்சோர்டாஸ் இது குறித்து கூறுகையில்

”ஊறுகாய் சாறு தசைப்பிடிப்பை தடுக்க பயன்படுத்தலாம் என்று நம்புகின்றனர். விளையாட்டு நிகழ்வுக்கு முன் இந்த ஊறுகாய் சாறு குடிப்பதால் எந்த நன்மையும் இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் தசைப்பிடிப்பு தொடங்கும் போது அதை எடுத்துக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக குடிக்க வேண்டியதில்லை.

அது குடிப்பதற்கு பதிலாக 20 முதல் 30 நிமிடங்கள் வரை வாயில் கொப்பளிக்க வேண்டும். அப்போதுதான் வினிகரும், உப்பும் செயல்பட தொடங்கும். அதன் பிறகு அந்த ஊறுகாய் சாற்றை துப்பலாம். ஆனால் சில விளையாட்டு வீரர்கள் சுவையை போக்க தங்கள் வாயை தண்ணீரை வைத்து கொப்பளித்து தவறு செய்கிறார்கள்.

ஊறுகாய் ஜாடியில் மிளகாய் சேர்த்து ஊற வைப்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். சுவை எவ்வளவு கொடூரமாக இருக்கிறதோ..அவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஊறுகாய் சாறு திரவத்துடன் இணைந்து எலக்ட்ரோலைட்டுகளின் செறிவு இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ஊறுகாய் சாறு எடுப்பதால்..

எல்லாராலும் விரும்பக்கூடிய சாறாக இந்த ஊறுகாய் சாறு இருக்காது. இது மிகவும் அடர்த்தியாகவும், உப்புத்தன்மையுடன் இருப்பதால் சிலருக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். இது குறித்து மருத்துவர் கூறுகையில், ஒருவர் தடகள வீரர்கள் ஊறுகாய் சாறு குடித்த பிறகு ஆட்ட மைதானத்திலேயே வாந்தி எடுப்பதை தான் பார்த்திருப்பதாக கூறுகிறார். எல்லாவற்றிற்கும் பயிற்சி தேவைப்படுவது போல் ஊட்டச்சத்து செயல் திறனுக்கும் பயிற்சிகள் தேவைப்படும்” என்றுa அவர் கூறுகிறார்.

ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார... மேலும் பார்க்க

Eng v Ind: 'கையில் காயம்; கம்பீருடன் போட்ட திட்டம்' - சதத்தைப் பற்றி ஜெய்ஸ்வால்

'ஜெய்ஸ்வால் சதம்...'இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்திருந்தார். அவரின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருக்கிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' - லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?

'ஜெய்ஸ்வால் சதம்...'இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளிலேயே சதமடித்திருக்கிறார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அசத்தலான இன்னிங்ஸ்! தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே பெர்த்... மேலும் பார்க்க

ENG vs IND: நம்பர் 3 பேட்டர்; வாழ்த்தி அனுப்பிய புஜாரா; சாய் சுதர்சனுக்கு இருக்கும் சவால் என்ன?

'அறிமகமாகும் சாய் சுதர்சன்!'இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியிலேயே சாய் சுதர்சனை இந்திய அணி அறிமுகப்படுத்தியிருக... மேலும் பார்க்க

LA Lakers: ரூ.86,000 கோடிக்கு விலைபோன கூடை பந்து அணி - முடிவடையும் 46 ஆண்டு லெகஸி!

அமெரிக்காவின் உள்நாட்டு கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ், 10 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக மதிப்புள்ள விளையாட்டு அணியாக உருவாகியிருக்கிறது என ESPN அறிக... மேலும் பார்க்க

Ashwin : 'துண்டை வைத்து பந்தை சேதப்படுத்தினாரா அஷ்வின்?' - TNCA வெளியிட்ட முக்கிய தகவல்!

'அஷ்வின் மற்றும் திண்டுக்கல் அணி மீது புகார்!'தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனான அஷ்வின் மற்றும் அந்த அணியின் வீரர்கள் பந்தை வேண்டுமென்றே சேத... மேலும் பார்க்க