செய்திகள் :

TNPL: சாய் சுதர்சன் ஆப்சன்ட்... தொடர்ந்து சொதப்பும் கோவை அணி; மதுரைக்கு வெற்றி!

post image

டிஎன்பிஎல் நடப்பு சீஸனில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு சற்று நல்ல தொடக்கம் கிடைத்தது.

ஷாருக்கான்

பவர்பிளே முடிவில் அந்த அணி 55 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தது. கேப்டன் ஷாருக்கான் மட்டுமே நிலைத்து நின்றார். மறுமுனையில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து, தன் அணி சற்று சவால் அளிக்க கூடிய ஸ்கோர் எடுக்க உதவினார். மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின், சரவணன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

மதுரை அணி

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு அரவிந்த் மற்றும் சீதாராம் அருமையான தொடக்கத்தை அளித்தனர். 10 வது ஓவரில் தான் அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. கோவை அணியின் பெளலிங் மற்றும் ஃபீல்டிங் மிகவும் சுமாராகவே இருந்தது.

இதனால் மதுரை அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அரவிந்த் 68 ரன்களும், அதிரடியாக விளையாடி மதுரை கேப்டன் சதுர்வேத் 23 பந்துகளில் 46 ரன்களும் சேகரித்தனர். இந்த சீஸனில் முதல் வெற்றியை மதுரை பதிவு செய்துள்ளது. சிறப்பாக ஆடிய அரவிந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை அணி அரவிந்த்

டிஎன்பிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் கோவை அணி இந்த சீஸனில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் இல்லாதது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`ஐஸ் ஹாக்கியில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்' - உறைபனியில் உருவான அணியின் கதை!

ஹாக்கி உலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்திருக்கும் இந்தியாவை, மகளிர் ஐஸ் ஹாக்கியில் முதல்முறையாகப் பதக்க மேடையில் மிளிரச் செய்திருக்கிறார்கள் வீராங்கனைகள்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில், கடந்த மே 31 முதல் ... மேலும் பார்க்க

Pickle Juice: விளையாட்டு வீரர்கள் ஏன் ஊறுகாய் சாறு எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா?

பொதுவாக விளையாட்டு வீரர்கள் ஊறுகாய் சாறு எடுத்துக் கொள்வார்கள். பல விளையாட்டு வீரர்களுக்கு ஊறுகாய் சாறு ஒரு முக்கிய உணவாகிவிட்டது. எதற்காக இந்த ஊறுகாய் சாற்றை பருகுகிறார்கள்? இது அவர்களுக்கு எவ்வாறு உ... மேலும் பார்க்க

Ashwin : 'பேசுறது மட்டும் போதாது; செயல்லயும் காட்டணும்' - அஷ்வின் செய்தது தவறுதான்! - ஏன் தெரியுமா?

'வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஷ்வின்!'தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் நடுவர் கொடுத்த தீர்ப்பில் திருப்தியடையாத அஷ்வின், ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு க்ளவுஸை தூக்கி எறிந்து வெளியேறும் வீடியோ இண... மேலும் பார்க்க

Dhoni : 'இந்திய அணியை கட்டியெழுப்பிய கேப்டன்!' - தோனிக்கு ஏன் 'Hall of Fame' கௌரவம் தெரியுமா?

'Hall of Fame பட்டியலில் தோனி!'தோனியை தங்களின் 'Hall of Fame' வீரர்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது ஐ.சி.சி. தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜாம்பவான் வீரர்களாக ஐ.சி... மேலும் பார்க்க

TNPL: `இ சாலா... இங்கயும் நாங்க தான்!' - பொளந்து கட்டிய ஆர்சிபி வீரர்.. சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. கோவையில் இதற்கு முன்பு நடைபெற்ற 5 லீக் போட்டிகளிலும் சேஸ் செய்த அணிகளே வெற்றி... மேலும் பார்க்க

32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் ஆசிய விளையட்டுப் போட்டிகள்; மிதக்கும் கிராமத்தில் வீரர்கள்!

ஜப்பானில் 1994-க்குப் பிறகு 2002-ல் கால்பந்து உலகக் கோப்பை, 2019-ம் ஆண்டில் ரக்பி உலகக் கோப்பை, 2021-ம் ஆண்டில் ஒலிம்பிக் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், கடந்த 32 ஆண்... மேலும் பார்க்க