செய்திகள் :

PM Modi: ``பட்டப்படிப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட முடியாது.." - நீதிமன்றத்தில் பல்கலைக் கழகம்!

post image

பிரதமர் மோடியின் BA, MA பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா RTI சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை கேட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பிரதமர் மோடி குஜராத் பல்கலைக்கழகத்தில் MA பட்டம் பெற்றுள்ளார் என்றுக் கூறப்படுகிறது. எனவே அந்தக் கல்விச் சான்றிதழ் நகலைப் பார்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் 2023-ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 'பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ்களை பிரதமர் அலுவலகம், குஜராத், டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்க தேவையில்லை" என்று தீர்ப்பளித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், நீரஜ் சர்மா தொடர்ந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் டெல்லி பல்கலைக் கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ``பிரதமர் மோடியின் BA பட்டப் படிப்பு சான்றிதழை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார். ஆனால் பொது அரங்கில் வெளியிட முடியாது" என்றார். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சச்சின் தத்தா கூறும்போது, ``விசாரணை நிறைவடைந்துவிட்டது. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: `அனைத்து தரப்பினருக்கும் அனுமதி; அதேசமயம்...' - நீதிமன்றம் உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது . இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்த... மேலும் பார்க்க

ஈஷா:`மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா?’ - அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்

ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், வெள்ளியங்கிரி மலை அடிவ... மேலும் பார்க்க

Breath Analyzer: `மது பரிசோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் இனி செல்லாது' - பாட்னா உயர்நீதிமன்றம்

ப்ரீத் அனலைசர் மூலம் கிடைக்கும் தகவல் உறுதியான ஆதாரம் கிடையாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டு வதாலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? - அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் ... மேலும் பார்க்க

PVR : 25 நிமிடங்கள் நீடித்த விளம்பரம்; பி.வி.ஆருக்கு ரூ.1,28,000 அபராதம் - நுகர்வோர் மன்றம் அதிரடி!

பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பி.வி.ஆர் சினிமாஸ் நிர்வாகம், சரியாக திரைப்படம் தொடங்கும் நேரத்தை டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இப்போது பெரும்பாலான தியேட்டர்கள் பி.வி.ஆர் நிர்... மேலும் பார்க்க

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் ... மேலும் பார்க்க