செய்திகள் :

Pongal Release: பிற்போடப்பட்ட விடாமுயற்சி; ஒரே நாளில் ரிலீஸை அறிவித்த படங்கள் என்னென்ன?

post image
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'.

இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று நேற்று (31.12.2024) இரவு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனதால் சில படங்கள் பொங்கல் அன்று தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றனர்.

மெட்ராஸ்காரன்

அந்தவகையில் SR புரொடக்ஷன் சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ்காரன்' பொங்கலுக்கு ரிலீஸாக போவதாகப் படக்குழு அறிவித்திருக்கிறது.

அதேபோல இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டென் ஹவர்ஸ்'.

இத்திரைப்படத்தினை டுவின் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

'தேஜாவு' படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.

தருணம்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் பொங்கல் அன்று வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதை உறுதி செய்திருக்கிறது படக்குழு.

நீங்கள் எந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமென்ட் செய்யுங்கள்...

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Nesippaya: "இளையராஜாவின் குணம்.. நா.முத்துக்குமார் காம்போ.." - யுவன் குறித்து சிவகார்த்திகேயன்

'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்ற... மேலும் பார்க்க

Nesippaya: "விஜய் டிவில ரூ.4500 சம்பளம் வாங்குனப்ப என் மாமனார்..." - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்

'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள... மேலும் பார்க்க

Exclusive: ``அப்பாவை ஹாரிஸ் மாம்ஸ்னு கலாய்ப்பேன்!'' - ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிகோலஸ் பேட்டி!

சுயாதீன இசைக்கலைஞர்கள் பலரும் இப்போது இணையவெளியில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.வாரந்தோறும் ஒரு சுயதீன ஆல்பம் நம்மை வைப்பாக்குகிறது. இதோ அடுத்ததாக வந்துவிட்டது சாமுவேல் நிக்கோலஸின் `ஐயையோ' என்ற ... மேலும் பார்க்க

Sakshi Agarwal Wedding: சாக்‌ஷி அகர்வால் - நவ்னீத் திருமண புகைப்படங்கள் | Photo Album

Sakshi Agarwal - NavneetSakshi Agarwal - Navneet weddingSakshi Agarwal - Navneet weddingSakshi Agarwal - Navneet weddingSakshi Agarwal - Navneet weddingSakshi AgarwalSakshi AgarwalSakshi AgarwalSakshi... மேலும் பார்க்க

Sakshi Agarwal Wedding: பால்யகால நண்பரை கரம் பிடித்த நடிகை சாக்‌ஷி அகர்வால்!

Sakshi Agarwal Wedding: தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். சின்ன திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷி தனது பா... மேலும் பார்க்க